Header Ads



மஹிந்த தொடர்ந்தும் தோல்வியடைவார், வெற்றியீட்டினாலும் பிரதமர் பதவி கிடையாது, ஆதரவளிக்கவும் மாட்டேன் - குமுறுகிறார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தோல்வியைத் தழுவுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள எடுத்தத் தீர்மானம் சரியானதே. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றிருந்தால் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவளித்திருக்கமாட்டார்.

கடந்த இரண்டு வாரங்களில் எனக்கு தாக்குதல் நடத்தப்பட்டதனைப் போன்று வேறு எந்த ஜனாதிபதிக்கும் தாக்குதல் நடத்தப்படவில்லை. காட்டிக் கொடுத்தவன் என அடையாளப்படுத்தப்பட்டேன். கெட்டவன், காட்டிக் கொடுத்தான் என குற்றம் சுமத்தப்பட்டது.

இவ்வாறு என்னை குற்றம் சுமத்தி செய்தி வெளியிட ஊடகங்களுக்கு சுதந்திரம் காணப்பட்டது. என்னைத் துரோகி என அடையாளப்படுத்துவோர் நாட்டின் ஜனநாயக நிலைமைகளை நடைமுறைச்சாத்திய ரீதியாக ஆராயுமாறு கோருகின்றேன்.

மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தேர்தல்களில் தோல்வியடைவார். இந்தப் பிழையை மஹிந்த செய்யவில்லை,ஜே.ஆர். ஜயவர்தன உருவாக்கிய முறைமை பிழையானது. யாரையும் பிழை சொல்ல வேண்டாம் இந்த முறைமையிலேயே தவறு காணப்படுகின்றது. சுதந்திரக் கட்சியை சின்னாபின்னமாக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது.

மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டதற்கு எழுத்து மூலம் எனது எதிர்ப்பை வெளியிட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

2
மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் பிரதமர் பதவியை வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

3
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது தாம் நடுநிலைமையாக செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எவ்வகையிலும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

4 comments:

  1. LIes, Lies, Lies...............................you've failed as a leader.................................................

    ReplyDelete
  2. Mr. My3 I r still making the people mad. நீங்கள் கட்சிக்கு தலைவரீகவிருந்தும் மகிந்தவிற்கு வேட்பு மனுவை விருப்பமில்லீமல் வழங்கப் பட்டது என்று நா கூசாமல் மக்களை மீண்டும் ஏமாற்ற நினைக்கின்றீரே இது தான் உங்களின் நயவஞ்சகத்தனம்

    தப்பித்தவறி உங்கள் கட்சி வெற்றி பெற்றால் மகிந்தவை பிரதமராக்கிவிட்டு என் விருப்பம் இல்லாமல் அவரை பிரதமராக்கிவிட்டேன் நான் துரோகி அல்ல மகிந்தவின் எதிரி தான் என வாய் கூசாமல் சொல்லுவீர

    " கேட்பவன் கேணையனக இருந்தால்...........

    இந்திய றோவின் அழுத்தம் என்னை விடவில்லை எனவும் கூறுவீர்

    ReplyDelete
  3. IF YOU CAN'T CONTROL YOUR PARTY SECRETARY AND MAHINDA'S GROUP OF AROUND 100 PEOPLE, HOW YOU ARE GOING TO ADMINISTRATE THE WHOLE COUNTRY. WE EXPECTED ALL THESE EXPLANATION FOR CHEATING 6.2 MILLION PEOPLE AND WE ARE NOT READY TO ACCEPT THOSE REASONS.

    FROM THE DAY 1, AS A PRESIDENT, YOU KNEW ALL THE POLITICAL SITUATION OF THE COUNTRY. BUT YOU NEVER TOOK ANY ACTION AGAINST THOSE INVOLVED IN CONSPIRACY, INSTEAD, YOU ORDERED FCID TO TO ARREST MAHINDA AND HIS GROUP.

    IF F.M SARATH FONSEKA WAS THE PRESIDENT, HE COULD HAVE DONE BETTER THAN YOU. MR. MY3.

    ReplyDelete
  4. good morning Mr. President (Just now he wake up)

    ReplyDelete

Powered by Blogger.