Header Ads



மைத்திரி வெளியேற்றப்படுவாரா..? மஹிந்தவின் சண்டைக் காட்சிகளை இனிமேல் நேரடியாக பார்க்கலாம்..!

-நஜீப் பின் கபூர்-

நான் தேர்தலில் நடுநிலையாக இருப்பேன். மஹிந்த பற்றிய ஜனவரி 8ம் திகதிக்கு முன்புள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் கிடையாது.

இந்தத் தேர்தலில் நான் ஒருபோதும் மஹிந்தவை ஆதரிக்க மாட்டேன் என்று மைத்திரி கூறியதுடன் என்னை கடந்த சில தினங்களாக துரோகியாகவே பார்த்தனர் என்று குறிப்பிட்டார்.

மஹிந்த தரப்பினர் சதிகளைத் தோற்கடிப்பதற்காகவே நான் கடந்த சில காலம் மௌனமாக இருந்தேன். மஹிந்தவைப் பிரதமராக்கும் சதித் திட்டம் இருந்தது. இதனால்தான் நான் பாராளுமன்றத்தைக் கலைத்தேன் என்றும் அவர் குறிப்படுகின்றார்.

சில நிமிடங்களுக்கு முன்பு ஜனாதிபதி மைத்திரிப்பால சிரிசேன செய்த அறிவிப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கின்றது.

கடந்த மாதம் சுதந்திரக் கட்சிக்குல் சிவில் யுத்தம் என்ற பெயரில் மைத்திரி-மஹிந்த மோதல் பற்றிய கட்டுரையில் சொல்லி இருந்தோம்.

இன்று நேரடியாக இதற்கான போர்ப் பிரகடனத்தை மைத்திரி அறிவிப்புச் செய்திருக்கின்றார். எனவே எதிர்வருகின்ற சில மணி நேரத்தில் மஹிந்த தரப்பு இது பற்றிய பதில் நடவடிக்கைகளை அறிவிக்கக் கூடும்.

எமக்குக் கிடைக்கின்ற புதிய தகவல் படி மைத்திரியின் இந்த நடவடிக்கைக்குப் மாற்று நடடிவடிக்கை எடுப்பது தொடர்பாக பேசுவதற்கு தொலைபேசி அழைப்புக்கள் மஹிந்த தரப்பில் கொடுக்கப்பட்டு வருகின்றது.

சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தைக் கூட்டி மைத்திரியைக் கட்சியில் இருந்து வெளியேற்றுகின்ற நடவடிக்கைக்கும் இடமிருக்கின்றது. என்றாலும் அந்தக் கட்சியில் உள்ள மிதவாதிகள் இதனை இப்போதைக்குத் தடுக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள்.

மைத்திரியின் இந்த அறிவிப்பால் சுதந்திரக் கட்சிக்குள் உள்ள மைத்திரி ஆதரவாலர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாக இடமிருக்கினறது.
 
அவர்களைத் தேர்தலில் தோற்கடித்து மஹிந்த தரப்பினரின் கரங்களை மேலோங்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் இந்தத் தேர்தலில் நிச்சயம் இடம் பெறும். எனவே சுதந்திரக் கட்சிக்குள் தற்போது மைத்தரி மஹிந்த போர் காட்சிகளை நேரடியாக அரசியல் அரங்கில் பார்க்க முடியும்.

வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயலாளர்கள் செயலாற்றி இருக்கின்றார்கள். கம்பஹவில்  சந்திரிக்க தயாரித்த பட்டியலை சுசில் தரப்பு தூக்கி எறிந்து இருக்கின்றது என்று அர்ஜூன குற்றம் சாட்டுகின்றார்.

சுதந்திரக் கட்சியைப் புனிதமாக்கின்ற  பணியில் மைத்திரி தோற்றதால்தான் இந்த அதிரடி நடவடிக்கை என்று தெரிகின்றது.

No comments

Powered by Blogger.