Header Ads



மைத்திரி ராஜினாமா செய்வாரா..?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து, மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. 

வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி தினமான இன்று, ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என்றும் அதன்போதே அவர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலமைப் பொறுப்பை வகிக்கும் மைத்திரிபால சிறிசேன அதிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் ஜனாதிபதி இது தொடர்பில் விசேட உரையொன்றை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிக்கு தமது கட்சியின் ஊடாக வேட்புமனு வழங்கியதையடுத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த கட்சிகளில் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இந்நிலையிலேயே ஜனாதிபதி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலமைப் பொறுப்புகளிலிருந்து பதவி விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

1 comment:

  1. Edukkamaley vittirukkalame ? Allathu Nomination kodukkumunbe vittirukkalame ?

    ReplyDelete

Powered by Blogger.