பச்சோந்திக்கு பகல் கல்யாணம்...!
கறிச் சட்டியும்
நாய்ச் சண்டையும்
இன்று முதல்
உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்
இனிமேல்
வார இறுதிச் சந்தைகள்
சந்திக்கு சந்தி தினமும் கூடும்
தள்ளு வன்டில்கள்
பெட்டிக்கடைகள் மூலம்
மொத்த வியாபாரம் நடக்கும்
உலகம்
ஒடுங்கிச் சுருங்கி
ஓர் கிராமம் என்றாகி
பின்னர் உள்ளங் கையாகி
இன்று
முழு பிரபஞ்சமும்
விரல் நுனிகளுக்குள்
ஆனால்......
எம்மவர்கள்
ஊருக்கு ஒரு MP
கிராமத்துக்கு
ஒரு BASE ஹோஷ்பிடல்
பத்து வீதிக்கு
ஒரு பிரதேச சபை வேண்டும் என்று
உள்ளத்தால்
வெவ்வேறு கண்டங்களாய்
பிரிந்து நிற்பர்
இந்த தம்பிமார்
MP ஆகாமல் விட்டால்
வரும் தீமைகள்
இவர்கள் MP ஆனால்
கிடைக்கும் நன்மைகளை விடவும்
மிகக் குறைவுதான்
ஒரு வேசியின் வேதனையும்
தேவடியாளின் தேவையும்
சாணாக்கியமுள்ள
சாதனைத் தலைமைகளுக்கு
மட்டும் தான் தெரியும்
தோழர்களே
அந்த விலைமாதுவின்
சுகப் பிரசவத்துக்காக பிராத்தியுங்கள் !!!
அஸாத்,
ReplyDeleteகாலத்துக்குப் பொருத்தமான வெளிப்பாடு.
உங்கள் கவிதையின் தார்மீகக் கோபம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் சற்று பண்பற்றது போலத் தோன்றுகின்றது.
இந்த புதுக்கவிதைக்கு jeslya இன் தூஷன மறுப்புக்கு தாமதம் ஏனோ?
ReplyDeleteWow excellent, மிகவும் யதார்த்த மாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் எடுத்துரைக்கப் பட்டுள்ளது. மிக்க நன்றி.
ReplyDeleteபல முறை திரும்ப திரும்ப வாசித்தேன். முஸ்லிம்களின் தனித்துவத்துக்காக, ஒற்றுமைக்காக, உரிமைக்காக, பட்ட பாடும், இழந்த உயிர்களும், தியாகங்களும், காலம் நேரம் தொழில் குடும்பம் என்று பாராது முஸ்லிம் சாமுதயத்துக்காக பாடுபாட்ட இளைஞர்களின் தியாகங்கள் எனது கண் திரை முன் சென்று மறைந்தது.
நிட்சயமாக சுயநலக் கும்பல்கள், பணம், பட்டம், பதவிக்காக அலையும் இந்த கும்பல்களை நிட்சயமாக முஸ்லிம் மக்கள் தண்டிப்பார்கள். அப்படி அவர்கள் தவறுவார்களானால் அந்த இறைவனின் தண்டனையை இந்த முஸ்லிம் சமுதாயம் நிட்சயமாக தண்டிக்கப்படுவார்கள். அது ஒரு BBS ஆகவோ, அரசியல் திருத்த சட்டமாகவோ, தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வு காணப்படும் போதோ வாக இருக்கலாம்.
sariya sonninga bro slmc avoid pannum makkalukku porunthum
ReplyDeleteazath, like it or not we need some politicians to represent our community. for example do you know what minister risahrd badiudden did to relocate muslims who were expelled from jaffna ? your ignorance has no limit man.
ReplyDeleteஎங்கையா இருந்த இத்தன நாளா! ரெம்பே சிறப்பா இருக்கு , பொறவு ஜெஸ்ஸி சொன்ன மாதிரி அநாகரிகமாவெல்லாம் இல்ல ஒரு சமூக சவிதைக்கு உண்டானா தார்மீக கோபம், இப்படி கோபம் வந்து அந்த கோபத்தையும் ஒரு நாகரீகமா கவிதையா சொல்றது நல்லதுதான், ரோசம் இருக்கிற ஊரான் கொஞ்சம் யோசிப்பான்,
ReplyDeleteஇந்த தம்பி மார் mp ஆகாவிட்டால் ஏற்படும் விளைவு எம்பி எம்பி ஆகி ரோட்டு போறத விட குறைவுதான் , இது நம்ம தம்பிக்கு மட்டும் பொருத்தமில்ல எல்லா தும்பிகளுக்கும் பொருத்தம் , அப்புறம் எங்க தேன் கெடைக்குமோ அங்கதானே பறந்து தேன் எடுக்க முடியும்....
பாராலுமன்ரமே இப்போ சந்தையாகவும் தூசனவார்தைகள் விற்குமிடமாகவும் மாற்றப்பட்டிருப்பது jesslyக்கு தெரியவில்லையா???அங்கு இருப்பவர்கள் mpக்களா இல்ல இந்த கவிதை எழுதியதம்பிக்களா??
ReplyDelete