Header Ads



ஜனாதிபதி மைத்திரி, இன்று உரையாற்ற மாட்டார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜனாதிபதி இன்று விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் சூழ்நிலைமை மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்றைய அவ்வாறான உரை எதனையும் ஜனாதிபதி ஆற்ற மாட்டார் எனத்தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்த போது இவ்வாறு விசேட உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதி இன்று விசேட உரை எதனையும் நிகழ்த்த மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கட்சியின் தலைமைப் பொறுப்பினை வேறும் ஒருவருக்கு வழங்குவது குறித்து ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
 

4 comments:

  1. my3 he is not suitable person for the leadership, no any strong confidence and brave decision in his political way .

    ReplyDelete
  2. தெளிவான தீர்மானம் எடுக்க தில் இல்லை

    ReplyDelete
  3. நாட்டின் தலைவராக இருந்தவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துப் பழகிய காரணத்தால் அடாவடியாக இருப்பதைத்தான் ஆளுமை என்று நினைப்பதா?

    தலைவர் என்பதற்காக ஒரு சாதாரண மனிதனுக்குள்ள உரிமையை அவருக்கு யாரும் மறுக்கமுடியுமா?

    ReplyDelete
  4. No morre lies from Polonnaruwa Gamarala to the Nation......................................

    ReplyDelete

Powered by Blogger.