Header Ads



மீண்டும் மஹிந்த ஆட்­சிக்கு வந்தால் தமிழ், முஸ்லிம்கள் பழி­வாங்­கப்­ப­டு­வார்கள் - சோபித தேரர்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் பழி­வாங்­கப்­ப­டு­வார்கள். பழி­வாங்கும் நோக்­கத்தில் தான் மஹிந்த, கூட்­டணி அமைக்­கின்றார் என்று கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் அமைப்­பா­ள­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் தெரி­வித்தார்.

வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தை காப்­பாற்­று­வ­தாக ஜனா­தி­பதி எனக்கு செய்­து­கொ­டுத்த வாக்­கு­று­தியை மறந்­து­விடக்கூடாது எனவும் அவர் குறிப்­பிட்டார். அர­சி­யலில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் குழப்­ப­நிலை தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் கடந்த ஆறு மாதங்­களில் நாட்டில் பல நல்ல மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. மக்கள் எவ்­வித அச்­சமும் இன்றி வாழ ஆரம்­பித்­துள்­ளனர். ஊட­கங்கள் சுயா­தீ­ன­மாக இயங்க ஆரம்­பித்­துள்­ளன. மதக் கல­வ­ரங்­களோ அல்­லது இன முரண்­பா­டு­களோ இந்த ஆறு மத காலத்தில் பதி­வா­கி­ய­தாக நான் அறி­ய­வில்லை.

மக்கள் மிக நீண்ட நாட்­களின் பின்னர் அமை­தி­யாக வாழ்ந்து வரும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது. இவ்­வா­றான நிலையில் அதி­கார ஆசையை காரணம் காட்டி மீண்டும் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­விட வேண்டாம். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்­டணி தமது சுக­போக வாழ்க்­கை­யினை வாழ்­வ­தற்­காக நாட்டு மக்­களை அடி­மை­க­ளாக நடத்­தினர். மத­வா­தத்­தையும், இன முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­வித்­தனர்.

கடந்த முப்­பது வரு­டங்­க­ளாக இந்த நாடு எவ்­வா­றான சூழ்­நி­லைக்கு முகம்­கொ­டுக்க வேண்டி ஏற்­பட்­டதோ அதே நிலைமை கடந்த ஐந்து ஆண்­டு­க­ளிலும் நில­வி­யது. வெறு­மனே போர் வெற்­றியை மாத்­திரம் வைத்து சிங்­கள இன வாக்­கு­களில் வாழலாம் என மஹிந்த நினைத்தன் கார­ணத்­தினால் தான் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் தோல்­வியை சந்­தித்தார்.

இந்த ஆறு­மாத காலத்தில் யாரு­டைய தனிப்­பட தேவைக்­கா­கவும் ஆட்சி நடை­பெ­ற­வில்லை. முழு­மை­யாக மக்­களை இலக்கு வைத்தே ஆட்சி நடந்­துள்­ளது. இந்­நி­லையில் மீண்டும் சர்­வா­தி­கார ஆட்­சிக்­கான முயற்­சி­களை உட­ன­டி­யாக தடுத்து மக்கள் ஆட்­சியை பலப்­ப­டுத்த வேண்டும். கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் அரச தரப்­பினர் மற்றும் ஏனைய கட்சி தலை­வர்கள் என்னை சந்­தித்து பேச்­சு­வார்த்தி நடத்­தினர். இதன்­போது எக்­கா­ர­ணத்தை கொண்டும் நாட்டில் மீண்டும் சர்­வ­தி­கார தலை­மைத்­து­வத்தை உரு­வாக்க துணை நிக்கப் போவ­தில்லை என எனக்கு வாக்குக் கொடுத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் எனக்கு கொடுத்த வாக்­கு­று­தி­யினை மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­யாக நம்­பு­கின்றேன். எனவே மஹிந்­தவின் பின்னால் ஒரு­சிலர் செயற்­ப­டுகின்றனர். மஹிந்­தவை மீண்டும் ஆட்­சிக்கு கொண்­டு­வந்து அவர் மூலம் தமக்­கான சுக­போக வாழ்க்­கை­யினை அடைய நினைக்கும் எவ­ருக்கும் எந்த சந்­தர்ப்­பத்­திலும் அர­சி­யலில் இடம் கொடுக்கக் கூடாது.

அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியில் எந்த சந்­தர்ப்­பத்­திலும் வாய்ப்பு வழங்கக் கூடாது. இதை ஜனா­தி­பதி மக்­க­ளுக்­காக செய்ய வேண்டும். மஹிந்த மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வந்தால் மீண்டும் கட்­சியின் உறுப்­பி­னர்­களை மட்டும் அல்­லாது தன்னை தோற்­க­டித்த மக்­க­ளையும் சேர்த்தே பழிவாங்குவார். இதனால் அதிகளவில் தமிழ், முஸ்லிம் மக்களே பாதிக்கப்படுவார்கள். இப்போது மஹிந்த உருவாக்கும் கூட்டணியும் முழுமையாக பழிவாங்கல் அரசியலை செய்யவே முயற்சிக்கின்றது. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவற்றை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Publicity illamal Mahinda koottaththinaal valamudiyavillai. Mahindavinal tholvyai
    thaanga mudiyavillai. Mahida mattumalla muluk kudumbaththinazum kanavugalai
    makkal kulithondip puthaithu vittargal. My3 ippozu ella makkalazum janazipazi.
    Ivarukku katchi thevai illai.Election poruppai veru yaridamavathu oppadaiththuvittu
    kapchip enru irunthale pozumanazu. Innum solvazenral SLFP vetri tholvi patri
    veenaga alattikkolla thevaye illai !

    ReplyDelete

Powered by Blogger.