கிழக்கு மாகாண முஸ்லிம்களின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது - உதயராசா
கதிர்காம யாத்திரிகர்களை அவமதிக்கும் வகையில் கிழக்கிலுள்ள முஸ்லிம் பகுதிகளில் சில சம்பவங்கள் இடம்பெற்றமை கவலையளிக்கும் விடயமாகும் என்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
வடக்கு, கிழக்கிலிருந்து கதிர்காமத்துக்கு இந்து மத பக்தர்கள் வருடந்தோறும் பாத யாத்திரை செல்வது வழக்கமாகும். இம்முறையும் இந்து மத பக்தர்கள் பெருமளவானோர் பாதயாத்திரை சென்றிருந்தனர். இவ்வாறு பாதயாத்திரை சென்றவர்கள் கிழக்கில் முஸ்லிம் பகுதிகள் சிலவற்றில் கேலிக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவமானப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான செயற்பாடு கண்டிக்கத்தக்கதாகும். ஒரு மதத்தினரின் செயற்பாடுகளை மற்றைய மதத்தினர் மதிக்க வேண்டும். இதன்மூலமே நாட்டில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த முடியும். இதனை விடுத்து பாதயாத்திரிகர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வது முறையான செயற்பாடல்ல. இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள நடத்தப்பட வேண்டும் என்றுள்ளது.
These stupid hooligans should b rounded up n taught what is real Islam how Rasulullah sal ) respected other faiths.
ReplyDeleteIts an opportuniyy to show our hospitality to the pilgrims in this month of Ramadan .
ஏனைய மதத்தவர் புண்படும் படி அவர்களின் கடவுளை , மதத்தை பற்றி நிந்திக்க வேண்டாம் என இஸ்லாம் சொல்கிறது. இதை முஸ்லிம்களாகிய நாம் சரிவர பின்பற்ற வேண்டும். குறிப்பாக பல் சமுக கலாசாரங்களைக் கொண்ட எமது நாட்டில் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த ஈனச் செயலை செய்தவர்களுக்கு எதிராக அந்தந்த ஊர் பள்ளிகளினால் சரியான முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ReplyDeleteஅடுத்த மத மக்களையும் மதத்தையும் மதித்து நடப்பதும் இஸ்லாத்தில் ஒரு கடமை இதை முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டும் கேளிசய்தவர்கள் யாரன்பதை தீர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டிக்க தக்க விடயம்.
ReplyDeleteஎவராக இருந்தாலும் இது கண்டிக்கத்தக்கது. மற்ற மதத்தவர்களை மதித்து நடக்க வேண்டும்.ஆனால் உதயராசா அவர்களே கிழக்கு மகான முஸ்லிம்கள் என நீங்கள் குறிப்பிடுவது தவறு.ஒரு சில களிசரயல் செய்ததற்காக எல்லோரையும் குற்றம் சுமத்தாதீர்கள்
ReplyDeleteOnly JM publishes this news? Exactly where it happened and when? Don't aggravate communalism.
ReplyDeleteகிழக்கு மாகானப்பாதையில் கிழக்குமாகான முஸ்லிம்கள் மட்டும்தான் பயணிப்பதில்லை சில வழிப்போக்கர்கள் விடும் சேட்டையை முஸ்லிம்களின் தலையில் போடக்கூடாது .சரியாக இனம்கண்டு தண்டிப்பிப்பது,குறைகூறுவது நல்லது.
ReplyDeleteCulprits should be brought before law and order . suppose if you don't have substantial proof for your statement you may be a culprit for making disharmony among communities.
ReplyDelete