'அரசியலில் தொடர்ந்தும் இருக்க விரும்பவில்லை' ஹரின் பெர்ணான்டோ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கல் தீர்மானத்தின் கீழ் வேறு திட்டங்களை ஜனாதிபதி மைத்திரிபால கொண்டிருக்கலாம் என்று ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹரின் பெர்ணான்டோவின் டுவிட்டரில் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி மஹிந்த ராஜபக்வின் தரப்பு உயர்வில் இருந்து இறங்குவது கடினமானதே என்று ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மஹிந்த ராஜபக்சவுக்கு மைத்திரிபால வேட்புமனு வழங்கினால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக ஏற்கனவே வெளியிட்ட சவாலுக்கு அமைய இன்னும் 24 மணித்தியாலங்கள் தாம் அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பை செலுத்திய பின்னர், தாம் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக ஹரின் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, தமது தனிப்பட்ட நன்மைக்காக மக்களின் ஆணையை மாற்றுவாராக இருந்தால், தாம் அரசியலில் தொடர்ந்தும் இருக்க விரும்பவில்லை என்றும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Post a Comment