பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்பு
நாடாளுமன்றில் அங்கம் வகித்த 25 உறுப்பினர்கள் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஆபத்தான மருந்துப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களை வழங்கத் தயார் என அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு ஆபத்தான மருந்துப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் திலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது இந்த விடயம் குறித்து அனைத்து கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.
கடந்த நாடாளுன்றை பிரதிநிதித்துவம் செய்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என சபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என அவர் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Post a Comment