"கடும் மன ரீதியான அழுத்தங்கள் காரணமாகவே, ஜனாதிபதி சில தீர்மானங்களுக்கு இணங்கினார்"
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்து கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐக்கியத்தை காக்க வேண்டிய தேவை காரணமாக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் நபர்களுக்கும் விருப்பமின்றியேனும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய சிலரின் பெயர்களை கடும் சிரமத்திற்கு மத்தியில் நீக்கியதாகவும் ஏனையோரின் பெயர்களையும் நீக்க முடிந்திருந்தால், நன்மையாக அமைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பாதுகாக்க வேண்டும் என்பதால், விருப்பமின்றியேனும் சில தீர்மானங்களை எடுக்க நேர்ந்தது.
பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி வரும் நபர்களுக்கு வேட்புமனுவை வழங்காதிருக்க முடிந்திருந்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியுடன் இணக்கம் ஏற்பட்டிருக்கும்.
கடும் மன ரீதியான அழுத்தங்கள் காரணமாகவே ஜனாதிபதி சில தீர்மானங்களுக்கு இணங்கினார். குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் நபர்களுக்கு வேட்புமனுவை வழங்கியமை தொடர்பில் பெரும் கேள்விகளை தொடுத்து விட்டு, சம்பிக்க ரணவக்க,
அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகிச் சென்றனர் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Muzugelumbai kaanavillai enbazarkku iththanai piththalaattama ? Natkunaththin
ReplyDeletesitpam allava ?