மகிந்த இன்றி குருணாகலில் வேட்புமனு தாக்கல்
மகிந்த ராஜபக்ச இன்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருணாகல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்காக இன்று காலை குருணாகல் மாவட்ட செயலகத்திற்கு சென்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்கு சமூகமளித்திருக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வில் அனுரபிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர, சட்டத்தரணி கோமின் தயாசிறி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுவை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, அமைச்சர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன ஆகியோர் தாக்கல் செய்தனர்.

Post a Comment