Header Ads



சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும், கருத்து கணிப்புகளில் உறுதி - டிலான்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகளில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து கணிப்பு அறிக்கையை அரச ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடக தலைமை அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஒரு ஊடக நிறுவனத்தின் தலைவர் அவ்வாறு செய்ய முடியாது, அனைத்து தரப்புக்கும் இணையான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ஊடக நிறுவனத்தின் அந்த தலைவர் இடைநடுவில் எழுந்து சென்றுள்ளார். அவர் முதுகெலும்பு உள்ளவர் என்றால், தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார்.

குறித்த ஊடக நிறுவனத்தின் தலைவர் முதுகெலும்பு பலத்துடன் பணியாற்ற சக்தி கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். தொடர்ந்தும் நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால் அவர் பதவியில் இருந்து விலக தைரியம் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.