Header Ads



சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியவர்கள் வீடுகளுக்கு வரும்போது, பொல்லுகளை கொண்டு உபசரியுங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியவர்கள் வாக்குகேட்டு வீடுகளுக்கு வரும்போது அவர்களை பொல்லுகளை கொண்டு உபசரிக்குமாறு மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தமது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.

பொதுத்தேர்தல் வேட்புமனு தாக்கலின் பின்னர் இன்று மினுவாங்கொடையில் ஆதரவாளர்கள் மத்தியில் பிரசன்ன ரணதுங்க பேசினார்.

மஹிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தியோரே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இவர்களே மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப்படக் கூடாது என்று ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தவர்கள்.

இந்தநிலையில் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக் கொடுத்துள்ளனர் என்றும் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை, பொல்லுகளால் தாக்க வேண்டும் என்று தாம் கூறவில்லை என்று தெரிவித்துள்ள பிரசன்ன, அவர்கள் உங்களுடைய வீடுகளுக்கு வரும்போது கைகளில் பொல்லுகளை வைத்திருக்குமாறே கோருவதாக குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. திரு பிரசன்ன,

    ஒரு முதலமைச்சராக இருந்துகொண்டு வீதிச்சண்டியரைப் போல பேசுமளவுக்கு உங்களுக்கு இந்த நாட்டில் சுதந்திரத்தை தந்திருக்கின்ற அரசாங்கத்திற்கு முதலில் நன்றி கூறிவிட்டு உங்கள் பொல்லுகளை மக்களிடம் கையளியுங்கள்.

    ReplyDelete
  2. ராஜபக்சவின் ஆதரவாளன், அவரை பின்பற்றுபவன் என்பதை மிகவும் பக்குவமாக எடுத்துக் கூரியுல்லார். நிட்சியமாக ஆகஸ்ட் 17 இக்கு பின் சில நேரம் உங்களது தட் பாதுகாப்புக்கு பொல்லுகள் தேவைப்படலாம்.

    ReplyDelete
  3. காடையர்கள் இன்று தேர்தலில், இதுதான் கள நிலவரம். மக்கள் நாம்தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டியுள்ளது

    ReplyDelete
  4. Same pollo after elctn. 4 u

    ReplyDelete
  5. அட பிரசன்னா - ஆரம்பித்துவிட்டாயா உங்களது அட்டூழிய ஆட்டங்களை இதற்குள் ????

    கூண்டிற்குள் அடைக்கப்பட வேன்டியவர்களை ஆடுகளத்திற்கு வர அனுமதியளித்தால் என்ன நடக்கும் என்று புரியுமா மைத்திரிக்கு இப்பேதாவது ????

    அய்யோ மைத்திரியே - பொல்லைக் கொடுத்து அடி வாங்கிற வேலையை செய்துவிட்டாயே எத்தனை பேர் தடுத்த போதும் .............

    ReplyDelete

Powered by Blogger.