Header Ads



மகிந்த ராஜபக்சவிடம், ஞானசாரர் எழுப்பியுள்ள கேள்வி..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பொது பல சேனா இயக்கமே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கொண்டுள்ள எண்ணம் பிழையானது என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று 28.04.2015 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பொதுபல சேனா ஒப்பந்த அடிப்படையில் செயற்பட்டது என்று கூறப்படும் பொய்யான கருத்தை விட்டு வெளியே வருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் தோல்வியடைந்தும் மீண்டும் மீண்டும் அதே பாதையில் பயணம் செய்வது குறித்து கவலையடைய வேண்டியதை தவிர வேறு ஒன்று செய்ய முடியாது என கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருடங்கள் இருப்பதற்கு முன்னர் தேர்தல் ஒன்றிற்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தது எங்கள் அமைப்பா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

5 comments:

  1. 99.9999 % you’re the reason for failure, no doubt.

    ReplyDelete
  2. தென் தமய் பரிப்பு கன்ன வேலாவ.

    ReplyDelete
  3. பரிப்பு கன்ன லேஷ்தி வென்ன மாத்தயோ?

    ReplyDelete
  4. இலங்கை மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர், அதிலும் விசேடமாக முஸ்லிம்கள் நன்றி சொல்ல வேண்டியது பொது பல சேனாவிற்கு ஆகும்.

    இந்தாளு வாயை திறக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் மகிந்த ஆட்சி அல்லவா நடந்து கொண்டு இருந்திருக்கும்.

    ReplyDelete
  5. சபாஷ்! சரியான போட்டி!

    ReplyDelete

Powered by Blogger.