சம்பளம் வழங்க புதிய அரசாங்கத்தினால் முடியவில்லை - அப்பம் சாப்பிட்டு, தேனீர் அருந்துங்கள்
தற்பொழுது அரசாங்கத்தில் நிதி மேலாண்மை முறைகேடுகள் ஏற்பட்டிருப்பதனால் அரச அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்குவதற்கு புதிய அரசாங்கத்தினால் முடியவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதாக கூறிவிட்டு அரிசி மற்றும் தேங்காய்களின் விலையினை குறைக்கவில்லை.
சிங்கள தமிழ் புத்தாண்டிற்கான பலகாரங்களை செய்வதற்கு அரிசி, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களே அவசியம் எனினும் இவ்பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை.
இதேவேளை அப்பம் மற்றும் தேனீருக்கான நிர்ணய விலை வழங்கப்பட்டிருக்கின்றன. எனவே எதிர்வரும் புத்தாண்டு புண்ணிய காலத்தில் அப்பம் சாப்பிட்டு தேனீர் அருந்துவதற்கான சந்தர்ப்பத்தை தற்போதைய புதிய அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.jpg)
Plucking Hair from Eggs....
ReplyDeleteஆமாடா , மகிந்த ஆட்சியில் (அடுத்தவன் பணத்தில்) கோழி கறி சாப்பிட்ட ஒனக்கு , இப்ப ஆப சாப்பிட கஷ்டம் தான்,நல்லாட்சியில ஆப சாபிட்டலும் முஸ்லிம்கள் நிம்மதியா இருக்கிறது ஒனக்கு புடிக்க இல்லையாட ???
ReplyDeleteGood joker in our society.
ReplyDelete