Header Ads



மகிந்த ராஜபக்ச, ஒரு பில்லியன் கடனாளி..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம், அரச ஊடகங்களில் செய்த விளம்பரங்களுக்காக செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலுத்த தவறியுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு 206.1 மில்லியன் ரூபாவும், இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு 51.7 மில்லியன் ரூபாவும், அஷோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டட் (லேக் ஹவுஸ்) நிறுவனத்திற்கு 124.9 மில்லியன் ரூபாவும் முன்னாள் ஜனாதிபதி செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தவிர சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 4 மில்லியன் ரூபாவும், வசந்தம் தொலைக்காட்சிக்கு 11 மில்லியனும், வசந்தம் வானொலிக்கு 6 மில்லியன் ரூபாவும் லக்ஹன்ட வானொலிக்கு 6 மில்லியன் ரூபாவும், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு 592.6 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட வேண்டியிருப்பதாக ஊடகத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொகையானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விளம்பரங்களுக்காக செலுத்த வேண்டியவை என கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இது தொடர்பில் குறித்த அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் எவ்வாறு இந்த செலவுகள் செய்யப்பட்டன என்பது தொடர்பாக கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

No comments

Powered by Blogger.