Header Ads



மகிந்தவுக்கு எதிராக வழக்கு, தாக்கல் செய்யவுள்ளேன் - முதலமைச்சர் ஹரீன்

பதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட  உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர் நோக்கியிருக்கும் அவலங்கள் ஆகியன குறித்து முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கெதிராக வழக்குகள் தாக்கல்செய்யப்படவுள்ளன என ஊவா  மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பண்டாராவளை பொது   மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு உரையாற்றுகையில், உமா ஓயா திட்டத்தினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அத்துடன் மக்களும் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர்

இவ்உமா ஓயா திட்டம் குறிப்பிட்ட சிலரது தனிப்பிட்ட விருப்புகளுக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இத்திட்டத்தினால் பொது மக்களின் பணம் வீண் விரயமும் மோசடியும் செய்யப்பட்டிருக்கின்றது .

ஆகையினால் மேற்படி விடயங்கள் குறித்து சட்டத்துரையினரிடம் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இவ் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றதும் முன்னாள் நீர் பாசன அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரும் கெதிராக வழக்குகளை தாக்கல் செய்யவும் முடிவு செய்துள்ளேன் என்றார்.   

No comments

Powered by Blogger.