மகிந்த பயன்படுத்திய விமானப்படையின் ஹெலிகொப்டர் கட்டணத்தை, மைத்திரி செலுத்த வேண்டும் - விமல் வீரவன்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திய விமானப்படையின் ஹெலிகொப்டர்களுக்கான கட்டணத்தை செலுத்துவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கடமை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்கு விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தியதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் முன்னணியின் தலைவரே எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த விமான பயணங்களுக்கான விலை பட்டியலையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரிலேயே பதியப்பட்டுள்ளது. அதற்கு தனிபட்ட ரீதியில் நான் பொறுப்பு கூற முடியாது.
எனவே அதற்கான கட்டணத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மற்றும் செயலாளர் உட்பட அனைவரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஹெலிகொப்டருக்கான செலவுகளை விமானப்படைக்கு செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன.
சக வேட்பாளரிடையே முரண்பாடு காணப்பட்ட போதிலும் தேர்தல் பிரச்சார செலவுகளை தவிர்ப்பது நெறிமுறையற்றது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஹெலிகொப்டர் பலவற்றை பெற்றுக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தனது சக வேட்பாளருக்கு அவ்வாறான சந்தர்ப்பத்தினை வழங்காமல் இருப்பது சதாரணமான ஒரு விடயமா என கேள்வி எழுப்பியிருந்தார்,
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஹெலிகொப்டர் அல்ல விமானமே பெற்றிருந்தாலும் அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு நிதி உதவிகள் வெளிநாடுகளில் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்ல கணக்கு வாத்தியாரைய்யா நீவிர்
ReplyDelete