மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி - எஞ்சியவை யானைகளுக்கும் தீனியானது
புதுவருட காலத்தில் மரக்கறிகளின் விலை பாரியளவு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புது வருட காலத்தில் விற்பனை செய்யவென அதிக மரக்கறிகளை சந்தைக்கு விநியோகித்ததன் விளைவாக விலை அதிகளவு குறைந்துள்ளது.
இந்நிலையில் விற்பனை செய்துகொள்ள முடியாமல் போன 15 லட்சம் கிலோகிராம் எடையுள்ள மரக்கறியை காட்டு யானைகளுக்கு தீனியாக இட்டதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் யு.ஆர். தயானந்த தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் வியாபார நிலையங்களை மூடிவிடவுள்ளமை இவ்வாறு மரக்கறிகள் வீணாவதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

Post a Comment