அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம், சில கேள்விகள்..!
(மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் “ஜப்னா முஸ்லிம்” இணையத்துக்கு சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது கருத்துகள் அவரது மனவேதனைகளை வெளிப்படுத்திக் காட்டியுள்ளன. இருப்பினும், சில விடயங்களை அவர் தெளிவுபடுத்தவில்லை. இந்தச் சமூகம் (முஸ்லிம்) தன்னை நேசிப்பதாக கூறும் அவர், சமூகத்திலுள்ள சில அரசியல்வாதிகள் தனக்கு எதிராக சதி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ,நமது சமூகம் சார்ந்த கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தான் தயார் என்று குறிப்பிடும் அவர், இதற்கு ஒத்துழைக்காவிட்டால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்கு எழும் கேள்விகள் இவைதான்.. தான் சார்ந்த சமூகத்தில் இருந்து அவருக்கு எதிராகச் சதி செய்யும் அரசியல்வாதிகள் யார் என்பதனை அவர் தோலுரித்துக் காட்ட வேண்டும். இந்த விடயத்தில் இரகசியம் காக்கும் தேவை இல்லை. துணிச்சலே வேண்டும். எவ்வாறான சதிகளை அவர்கள் மேற்கொண்டனர் என்பதனையும் கூற வேண்டும். அவர்கள் மேற்கொண்ட சதி முயற்சிகளால் தன்னால் முன்னெடுக்கப்பட்ட சமூகம் சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தடைகள் ஏற்பட்டனவா? அவ்வாறெனின் அவை எவை?
,நமது சமூகம் சார்ந்த கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தான் தயார் என்று குறிப்பிடும் அவர், இதற்கு ஒத்துழைக்காவிட்டால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால். ரணில் விக்கிரமசிங்கவுடன் போட்டியிடாமல் தனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக ஏன் தனித்துப் போட்டியிட முடியாது? தனித்துவமான ஒரு முஸ்லிம் கட்சியானது சிங்கள தேசியக் கட்சி ஒன்றின் ஊடாக போட்டியிட வேண்டுமென்று என்ற தேவை கட்டாயமான ஒன்றா? அவ்வாறு போட்டியிட்டால்தான் வெற்றி பெற முடியுமென அமைச்சர் அவர்கள் கருதுகிறாரா?
வன்னி வாழ் முஸ்லிம் மக்கள் இந்த விடயத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது தனித்து போட்டியிட்டால் தோல்வி அடையும் நிலை கட்சிக்கு ஏற்படலாம் என்ற ஐயம் கட்சி மட்டத்தில் எழுந்துள்ளதா?
வன்னி முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட இதுவரை தீர்க்கமான தீர்வுகளை முன்வைக்காத நிலையில் அந்தக் கட்சியுடன் ஒட்டிக் கொள்ளும் தேவை இல்லையே?
தனித்து நின்று வெற்றி பெற்று தங்களது பலத்தை நிரூபித்து ஆட்சியில் உடன்படிக்கைகளுடானா பங்காளியாக இணைந்து கொள்வது பெருமை இல்லையா அமைச்சர் அவர்களே?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.

Good comment but minister deeply need to think about it
ReplyDelete