Header Ads



எனக்கெதிராக பல சதிக்காரர்கள் உள்ளனர் - இறைவனின் உதவியுடன், மக்களின் ஒத்தழைப்புடன் முறியடிப்பேன் - றிசாத் பதியுதீன்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சிறந்த வியுகங்களை அமைத்து, போட்டியிட தீர்மானித்துள்ளதாக jaffna muslim இணையத்திற்கு குறிப்பிட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன், பல்வேறு அரசியல் இனவாத மதவாத அரசியல் சக்திகள் தம்மை அரசியலில் இருந்து வெளியேற்ற சதி முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த சமூகத்தை நான் நேசிக்கிறேன். இந்த சமூகம் என்னை நேசிக்கிறது. இதனை சகிக்கமுடியாத பொது பல சேனா, தமிழ் தேசிய கூகூட்டமைப்பு மற்றும் சில நமது சமூக அரசியல் வாதிகள் எனக்கு எதிரான சதி நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர். இதனை இறைவனின் உதவியுடனும், மக்களின் ஒத்துழைப்புடனும் நிச்சயம் முறியடிப்பேன்.

பாராளுமன்ற தேர்தல் எம்மை எதிர்நோக்கியுள்ளது. எமது சமூகத்தின் பிரதிநிதித்தவத்தை அதிகரிக்க எத்தகைய தியாகங்கள் அவசியமோ அவை அத்தனையையும் செய்ய தயராகவிருக்கிறேன்.  இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.  நமது சமூகம் சார்ந்த கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருக்கிறேன். எனது முயற்சிக்கு நமது சமூகம் சார்ந்த கட்சிகள் ஒத்துழைக்காவிட்டால் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு தேர்தலில் போட்டியிடுவோம்.

எமது சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் பெறுவதற்கு தடையாக உள்ள காரணிகளை அடையாளம் கண்டு அதனை வெற்றிகொள்ள முயற்சிப்பேன். இல்லாதவிடத்து சில மாவட்டங்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் பிரதிநிதித்தவத்தை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பேன் எனவும் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. Allah ungalukku udavi saivaanaaha.

    ReplyDelete
  2. When we are close to the Rabbul Aalameen, no matter, how many evil plans our enemies design it will not work. With an engineering background, having a good brain, having Thakwa in your heart, I wish you continuing what you do.

    ReplyDelete

Powered by Blogger.