Header Ads



சவூதி அரேபியா கூட்டணி படைகளுக்கு, ஆயுத சப்ளையை விரைவுபடுத்தும் அமெரிக்கா

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த சவுதி அரசுக்கு ஆயுத சப்ளையை விரைவுபடுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

ஏமனில் நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த மார்ச் 19–ந் தேதி முதல் தீவிரம் அடைந்துள்ளது. அரசுக்கு எதிராக போரிடும் ஹவுத்தி கிளர்ச்சி படையை ஒடுக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்படுகிறது.

சவுதி அரேபியா குண்டு வீச்சு தொடங்கிய மார்ச் 19 முதல் இதுவரை அதாவது 3 வாரத்தில் 540 பேர் பலியாகி உள்ளனர். 1700 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் தெரிவித்துள்ளார். போரின் போது 74 குழந்தைகள் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக சவுதி அரசுக்கு வழங்கும் ஆயுதங்கள் துரிதமாக சென்றடைய அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை இணை மந்திரி டோனி பிளிங்கன் ரியாத்தில் நிருபர்களிடம் கூறுகையில், “ஏமனை ஆயுத பலத்தால் ஒருபோதும் கைப்பற்றிவிட முடியாது என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாங்கள் ஆயுதங்கள் சப்ளையை விரைவுபடுத்தியிருக்கிறோம். உளவுத்துறை பகிர்வை அதிகரித்திருக்கிறோம். இதற்காக கூட்டு ஒருங்கிணைப்பு திட்ட மையத்தையும் ஏற்படுத்தி உள்ளோம்” என்றார்.

1 comment:

  1. Americarhalin nokkame athuthane. Peace makers endra peyaril iru koottarai sandai poda vittu iruvarukkum weapons vittru pilaippathuthan americarhalin viyaparame. Ithil athlsayappada ondrumillai.
    Oor irandu pattal koothadikku kondattamam!

    ReplyDelete

Powered by Blogger.