Header Ads



ஹிருணிக்காவும் உள்ளே வருகிறார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிதாக ஐவரை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, கொட்டிக்காவத்தை பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி, கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க மற்றும் எதிரிவீர வீரவர்த்தன ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மத்திய செயற்குழுவில் இருந்து பந்துல குணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, டீ.பீ.ஏக்கநாயக்க, சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய செயற்குழுவில் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீக்குவதற்காகவே குறித்த ஐவரும் நியமிக்கப்படவுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.