Header Ads



மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய முடியாது - மைத்திரி திட்டவட்டம்

மஹிந்த ராபஜக்ஸ பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம உள்ளிட்ட தரப்பினர் மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டுமென கோரியிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த சந்திப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி பிளவடைந்து செல்வதனை அனுமதிக்க முடியாது எனவும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கட்சியை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.