Header Ads



சம்பிக்க ரணவக்கவை ஜனாதிபதியாக்க, கனவு காணும் ரத்ன தேரர்


அடுத்த 10 வருடங்களில் சிறந்த வலுவான தலைவர் ஒருவரை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தினமும் கனவு காண்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

10 வருடங்களில் சிறந்த வலுவான தலைவரை உருவாக்கி அவரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என தினமும் கனவு காண்கிறேன். 24 மணிநேரமும் அதனையே சிந்தித்து கொண்டிருக்கின்றேன்.

அது சம்பிக்க ரணவக்கவாகவும் இருக்கலாம். அவர் இல்லாமல் வேறு ஒருவராகவும் இருக்கலாம். ஆனால், சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், மிகவும் நல்லது. அவர் ஜனாதிபதியாக வருவதில் தவறு என்ன இருக்கின்றது எனவும் அத்துரலியே ரத்ன தேரர் கூறியுள்ளார்.

1 comment:

  1. இந்த கனவுதான் ஞாசார தேரவும் காண்கின்றார் .சம்பிக்க ஜனாதிபதியாக வரும் வரை இவர்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் அதனை குழப்பிக்கொண்டே இருப்பார்கள் .

    ReplyDelete

Powered by Blogger.