Header Ads



யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற, புதுமையான திருமண வைபவம் (படங்கள்)

-GTN-

மரங்களை அழித்து முற்றம் முழுவதும் சீமெந்திட்ட நிலையில் அழகிய யாழ்ப்பாணம் பங்குனி வெய்யிலால் கொளுத்துகிறது. இந்நிலையில் இன்று 06-04-2015 நடந்த திருமண நிகழ்வொன்றில் மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் விநியோகித்தமை புதிய சிந்தனையை தூண்டியுள்ளது.

நாச்சிமார் கோவிலில் நடந்த இத்திருமணத்தில் கொய்யாதேசி, மாதுளை, நெல்லி என பலவகை பயந்தரு மரக்கன்றுகள் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டன. திருமண நிகழ்விற்கு வந்தோர் மட்டுமன்றி வீதியால் சென்றோரும் இக்கன்றுகளை ஆர்வத்துடன் எடுத்துச்சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

மரக்கன்றுகள் ஒவ்வொன்றிலும் 'தயவு செய்து என்னையும் பலரையும் பயிரிட்டு பயன் பெறுங்கள்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

மணமக்கள் வைத்தியர் மற்றும் பொறியியலாளர் என்பதுடன், இவர்கள் உயர்தரப்பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் முதல் நிலையும் அகில இலைங்கை ரீதியிலும் முன்னணி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேவையற்ற ஆடம்பர செலவுகள் செய்யும் ஏனைய திருமண வைபவங்களும் இவர்களது சிந்தனையை பின்பற்றினால் யாழ் மற்றும் அண்டிய பிரதேசங்களில் தற்போது நிலவும் வறட்சிக்கும், வெப்பநிலை உயர்விற்கும் ஓரளவேனும் தீர்வு காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது



6 comments:

  1. மதம், மரபு, கலாச்சாரம், பண்பாடு, புண்ணாக்கு, புகையிலை என்று பிடிவாதம் பிடிக்காமல், அறிவிற்கும், காலத்தின் தேவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடைபெற்ற திருமணம், தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

    வெறும் புத்தகப் படிப்பை படித்து, பெயருக்குப் பின்னால் பட்டம் போட்டுக் கொள்வதை விட, இப்படி ஆக்கபூர்வமாக சிந்தித்து, கற்ற கல்வியும் மகிழ்ச்சியடைய செய்த இவர்கள் சிறந்தவர்களே.

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று சிந்திக்காமல், தங்களது திருமணங்களையும் ஆக்கபூர்வமான வழியில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. ஜப்னா முஸ்லிம், என்னய்யா இப்படி பண்ணிப் புட்டீங்களே?

    எந்தக் கோமண்டை போட மாட்டர்கள் ஏறனு நினைத்தேனோ, அதைப் போட்டுவிட்டு, போடுவீர்கள் என்று நினைத்த கோமண்டை வெட்டி விட்டேர்களே?

    ReplyDelete
    Replies
    1. Islaamiya thirumanam eppadi pattathu theriuma
      Oru thirumanaththukku 5 paeyar maaththiram thevai ungalapola markkam theriyaatha wengayankal. thaan aadamparamaaha seihiraarkal

      Delete
  4. தங்கள் திருமணங்களையும் ஆக்கபூர்வமா வழியில் அமைத்த கொள்ள வேண்டும்

    லிட்டில் ஸ்டாரின் சிறந்த அறிவுரை தமிழர்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete

Powered by Blogger.