சூழ்ச்சி குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால கவலை (விபரம் இணைப்பு)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியமை மற்றும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தடுக்கும் சூழ்ச்சிகள் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்புச் செய்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ஏற்படுத்தி அவருக்கு ஆதரவு வழங்கிய, தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர். நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு, பிரஜைகள் சக்தி, .இடதுசாரி மையம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இந்த சந்திப்பில் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பாணை அனுப்பியமையானது 19வது திருத்தச் சட்டத்தை தடுக்கும் சூழ்ச்சியாகும்.
இந்த அறிவிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதை ஆணைக்குழுவின் தலைவர் பாலபட்டபெந்தி அறிந்திருக்கவில்லை. அறிவிப்பாணை அனுப்பும் போது இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாட்டில் இருக்கவில்லை. யார் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிப்பாணை அனுப்பினர்கள் என்பது தெரியவில்லை.
நிறைவேற்று அதிகாரங்களை கைவிட நான் தயாராக இருப்பதால், நிறைவேற்று அதிகாரத்தை நான் பயன்படுத்துவதில்லை.
இதனால், இலஞ்ச ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நான் மாற்றவில்லை. ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானோர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதை முன்னிட்டு நான் ஆரம்ப உரை நிகழ்த்தும் நோக்கில் சென்றிருந்தேன். எனக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் நகல் பிரதிகள் வெட்டி கொத்தப்பட்டு தாறுமாறாக மாற்றப்பட்டிருந்ததுடன் வாசிக்க முடியாதபடி காணப்பட்டது.
இதுவும் 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு எதிரான சூழ்ச்சியாகவே நான் கருதுகிறேன்.
அரசாங்கத்திடம் இருக்கும் பணத்தை விட பெருந்தொகை பணத்தை ராஜபக்சவினர் கொள்ளையிட்டுள்ளனர். இந்த பணம் ராஜபக்சவினருக்கு சார்பாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.
19வது திருத்தச் சட்டம் மாத்திரமல்ல, தேர்தல் முறையில் மாற்றம் செய்வது தொடர்பில் நான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் கடமைப்பட்டுள்ளேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 27 ஆம் திகதி 19வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற முடியாது போனால், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
ராஜபக்சவினர் பெருமளவு பணத்தை கொள்ளை அடித்து அதனை ஆர்ப்பாட்டங்களுக்கு செலவழிக்கும் வரை இவர் என்ன செய்துகொண்டு இருந்தார்?
ReplyDelete100 திட்டம் தோல்வி, துமிந்த சில்வா போன்ற நாடே நன்கறிந்த குற்றவாளிகள் கூட கைது செய்யப்படவில்லை, இந்நிலையில், இவர் ஒரு வெள்ளாந்தி போன்று பேசுவதில் பயனேதும் இல்லை, நாடு ராஜபக்சவினரின் கைகளுக்கு செல்வதை இவரால் தடுக்க முடியாமல் போகும்.
தனது அதிகாரங்களை இவர் இனியும் பயன்படுத்தாவிட்டால், கழுத்துவரை வந்துள்ள வெள்ளம், தலைக்கு மேலே போன பிறகு, முழமென்ன, சாணென்ன என்கின்ற நிலைதான்.
எகிப்தின் முர்ஸி கூட ஜனநாயக ரீதியாக தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிதான், அனால் அவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்ட செய்தி நேற்றுத்தான் வாசிக்கக் கிடைத்தது.
ReplyDeleteஏனோ தெரியவில்லை, மைத்ரியைப் பார்த்ததும் முர்ஸி ஞாபகம்தான் வருகின்றது.
Dear President sir
ReplyDeletekindly use the execute power
முல்லையை முல்லால் தான் எடுக்க வேண்டும்.
ReplyDeleteஅதுபோல் அதிகார துஷ்பிரயோகம் செய்வோரை உங்களது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்காவிடின் சூழ்ச்சிகாரர்கள் வென்று விடுவார்கள். அப்புரம் நாடே இரத்த வெள்ளத்தில் மிதக்க வேண்டி ஏற்படும். பண்டா ஐயாவின் தாயழ குணமே அவரின் முடிவுக்கு காரணமாயிற்று
Dear mr president , if u wish to see a peacefull country u should move all rubbish which prevents ur journey. Then only ur journey would be success.
ReplyDeletedear, Mr, president, don t forgot your the execute president of SRILANKA.......go..go..
ReplyDelete