ஹக்கீம் மைத்திரி சந்திப்பு, நேற்றிரவு பிரதான கட்சிகளுடன் முக்கிய சந்திப்புகள்
19 வது திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக அமைச்சர்கள் ஹக்கீம், அஜித்பெரேரா மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததாக தெரியவருகின்றது.
19 வது திருத்தம் குறித்து எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான இறுதிமுயற்சியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அரசமைப்பு சபை நியமனம் மற்றும் அமைச்சர்களை நியமிக்கும்போது ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையுடன் செயற்படுவது ஆகிய விடயங்கள் தொடர்பாக எதிர்கட்சியினர் மத்தியில் கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன.
இது குறித்த கருத்துவேறுபாடு நேற்று தோன்றியவேளை ஜனாதிபதி இதற்கு தீர்வை காண குழுவொன்றை நியமித்தார்.இந்த குழுவில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர்.எனினும் இக்குழுவினால் குறிப்பிட்ட விடயங்களுக்கு தீர்வை காணமுடியவில்லை என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட குழுவினர் 19 வது திருத்தம் தொடர்பாக 90 வீத உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும்,எனினும் அரசமைப்பு சபையில் அரசியல்கட்சிகளினால் நியமிக்கப்பட்ட சுயாதீன உறுப்பினர்களுக்கு பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் எனஎதிர்கட்சியினர் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் மயப்படுத்தும் நிலையை தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு இதன் நோக்கம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியினர் இதனை எதிர்ப்பதை கடுமையாக சாடியுள்ள பிரதிவெளிவிவகார அமைச்சர் அஜித்பெரேரா 19 வது திருத்தத்தை குழப்புவதற்காகவே இந்த முயற்சி இடம்பெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதேவேளை அமைச்சர்களை நியமிக்கும்போது ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைப்படி செயற்படவேண்டும் என்ற விடயமே அடுத்த பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது.
19 வது திருத்தம் மூலம் பிரதமருக்கு கிடைக்கின்ற ஓரேயொரு அதிகாரம் இதுவென சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி.
இதேவேளை நேற்று ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. இதன் பின்னர் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் முன்ணணியினர் இந்த செயற்பாடுகளை குழப்புவதற்கு முயற்சித்தால்,19 வது திருத்தம் குறித்த செயற்பாடுகளிலிருந்து விலகிநிற்பது என தமிழ்தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தீர்மானித்துள்ளன.
.jpg)
Post a Comment