யெமனில் நிறுத்தப்பட் சவுதி அரேபிய, விமானத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பம்
யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சுமார் ஒருமாத காலம் நீடித்த வான் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரு வதாக சவ+தி அரேபியா அறிவித்துள்ளது. யெமனில் அரசியல் தீர்வுக்கான அமைதி முயற்சிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் சவ+தி குறிப்பிட்டுள்ளது.
' ஹவ்திக்களுக்கு ஆதரவளிக்கும் ஈரான், இந்த யுத்த நிறுத்தத்தை வர வேற்றுள்ளது. இந்த முன்னெடுப்பு சாதக மான சூழலை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் சாரிப், புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.
"சவ+தி அரேபியா மற்றும் அயல் நாடுகளுக்கு இருந்த அச்சுறுத்தல் அகற்றப் பட்டது, கனரக ஆயுதங்கள் அழிக்கப்பட்டன (என்பன உட்பட)… இராணுவ நடவடிக்கை அதன் இலக்கை எட்டியுள்ளது" என்று சவ+தி அரேபிய அரச செய்திச் சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி யெமனில் 'மீட்புக்கான நம்பிக்கை நட வடிக்கை' ஆரம்பிக்கப்படுவதாக சவ+தி குறிப்பிட்டுள்ளது.
இதில் அரசியல், இராஜ தந்திர மற்றும் இராணுவ நடவடிக்கைகள் ஒன்றிணைந்து செயற்படுத்தப்படும் என்றும் ஸ்திரமான மற்றும் பாதுகாப்பான எதிர்கால யெமனை கட்டியெழுப்புவதற்கான அரசியல் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் சவ+தி அரேபியாவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் யெமனுக்குள் ஹவ்தி கிளர்ச்சியாளர்களின் நகர்வுகள், செயற்பாடுகளை தடுக்க சவ+தி தலைமையிலான கூட்டணி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அந்த கூட்டணியின் பேச்சாளர் பிரிகேடியர் nஜனரல் அஹமது அசிரி குறிப்பிட்டார். சவ+தி அரேபியா கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பை வெள்ளை மாளிகை வரவேற்றுள்ளது.
எவ்வாறாயினும் வான் தாக்குதலை நிறுத் துவதாக சவ+தி கூட்டணி அறிவித்த பின்னரும் யெமனில் அந்த கூட்டணி வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. யெமனின் மூன்றாவது மிகப் பெரிய நகரான தாயிஸில் இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஹதி ஆதரவுப் படையினரின் இராணுவ முகாம் ஒன்று அந்த படையின் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாயிஸ் வடக்கு புறநகர் பகுதியில் இருக்கும் 35ஆவது ஆயுதப்படை அணியின் கட்டுப்பாட்டில் இருந்த இராணுவ முகா மையே கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலில் பலரும் கொல்லபட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் குறித்த முகாமை கைப்பற்றிய விரைவிலேயே சவ+தி கூட்டணி அதன் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இராணுவத்தின் 35ஆவது படையணி சவ+தியின் ஆதரவை பெற்ற ஜனாதிபதி ஹதிக்கு விசுவாசமாக உள்ளது. யெமனில் ஹவ்தி அல்லது செயிதி 'pயா கிளர்ச்சியாளர்கள் கடந்த ஜனவரியில் தலைநகர் சனாவை கைப்பற்றி ஜனாதிபதி ஹதியை அவரது மாளிகையில் வீட்டுக் காவலில் வைத்ததை அடுத்தே யெமனில் மோதல் தீவிரமடைந்தது.
கடந்த பெப்ரவரியில் தலைநகரில் இருந்து தப்பிய ஜனாதிபதி ஹதி தெற்கு நகரான அதெனில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் ஹவ்திக்களுக்கு ஆதரவாக இயங்கும் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவின் ஆதரவு படையினர் கடந்த மார்ச் இறுதியில் அதென் புறநகர் பகுதியை நெருங்கியதை அடுத்து, ஜனாதிபதி ஹதி அங்கிருந்து தப்பி சவ+தியில் அடைக்கலம் பெற்றார்.
யெமன் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட் டதாக செவ்வாய்க்கிழமை சவ+தி கூட்டணி அறிவித்தபோதும் நேற்று புதன்கிழமை காலையிலும் அதென் நகரில் ஹவ்திக்கள் மீது சவ+தி கூட்டணி வான் தாக்குதல்களை நடத்தியதாக அதென் நகர துணை ஆளுநர் நயாப் அல் பக்ரி குறிப்பிட்டார்.
சவ+தியின் ரியாத் நகரில் இருந்து புதன்கிழமை காலை தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஜனாதிபதி ஹதி, சவ+தி கூட்டணியின் ஆதரவுக்கு நன்றி தெரி வித்தார். "அரபு மற்றும் முஸ்லிம் சகோதரர் மற்றும் சட்ட அங்கீகாரத்திற்கு ஆதரவளித்த கூட்டணி நண்பர்களுக்கு யெமன் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஹதி குறிப்பிட்டார்.
சவ+தி கூட்டணியின் தாக்குதல் நிறுத்த அறிவிப்பு வெளியாகி ஒரு சில மணிநேரம் கழிந்த நிலையில், அரசியல் தீர்வுக்கான உடன்பாடு பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக ஹவ்தி தலைவர்கள் ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளனர். கடந்த மார்ச் 26 ஆம் திகதி முதல் சவ+தி தலைமையிலான கூட்டணி நடத்திய தாக்குதல்கள் வெற்றி அளித்ததாக அந்த கூட்டணி அறிவித்தபோதும் ஹவ்தி கிளர்ச்சியாளர்களால் அகற்றப்பட்ட யெமன் அரசு மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரப்படவில்லை. தலைநகர் சனாவின் கட்டுப்பாடு தொடர்ந்து ஹவ்திக்கள் வசமே உள்ளது.
எனினும் நேற்றைய தினம் காலையாகும்போதும் யெமனில் மோதல்கள் பதிவாகியுள்ளன. சவ+தி கூட்டணி கடைசியாக நடத்திய வான் தாக்குதல்களில் மாத்திரம் அதிகப் பெரும்பான்மையான சிவிலியன்க ளுடன் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். யெமனின் சவ+தி எல்லையில் இருக்கும் ஹரத் நகரில் பாதுகாப்பு கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஏழு படையினர் மற்றும் 13 பொதுமக்கள் பலியாகினர். இம்மாகா ணத்தில் ஆயுததாரிகள் கடக்கும் பாலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.
ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி சலே ஆதரவு படயினருடன் இணைந்து யெமனின் கணிசமான நிலத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த மோதல்களால் நாட்டில் உணவு மற்றும் ஏனைய அவசர தேவைகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகிறது. மோதல் காரணமாக யெமன் துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்க யுத்த கப்பல்களும் யெமன் கடலுக்கருகில் நிறுத்தப்பட்டு முற்றுகையில் ஈடுபட்டுள்ளது.
யெமனில் கடந்த ஒருசில வாரங்கள் நீடித்த மோதல்களில் 944 பேர்வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் 3,487 பேர் காயமடைந்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் உண்மையான பலி எண்ணிக்கை இதனை விடவும் பல மடங்கு அதிகம் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர். இதனிடையே தெற்கு யெமனில் இருக்கும் ஜனாதிபதி ஹதி ஆதரவுப் படையினர் தொடர்ந்தும் ஹவ்திக்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித் துள்ளது. அதென் நகர வீதிகளில் செவ்வாய் பின்னேரமும் மோதல்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடு கின்றன.
சவ+தியின் அறிவிப்பு உள்நாட்டு மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி இருப்பதாக அதென் குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட் டுள்ளார். "எந்த நோக்கத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று எமக்கு தெரியாது. தனது எல்லைகள் பாதுகாக்கப்பட்டதை அடுத்து இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக சவ+தி குறிப்பிடுகிறது. அதாவது அதென் நகரையும் தெற்கு யெமன் மக்களையும் சவ+தி கைவிட்டு விட்டது என்று அர்த்தமா?" என அவர் கேள்வி எழுப்பினார்.

Post a Comment