Header Ads



இஸ்லாமிய எதிர்ப்பு விளம்பரத்திற்கு, அமெரிக்க நீதிமன்றம் அனுமதி...!


நியுயோர்க் நகர பஸ் வண்டிகளில் போடப்படும் முஸ் லிம்கள் ய+தர்களை கொலைசெய்வதாக குறிப்பிடும் விளம்பரத்தை காண்பிக்க அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த விளம்பரம் தீவிரவாதம் மற்றும் வன்முறையை தூண்டுவதாக நிய+யோர்க் மாநகர போக்குவரத்து ஆணையம் வாதிட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி ஜோன் கொல்டில், கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் அமெரிக்க அரசியலமைப்பில் விளம்பரத்தை காண்பிக்க அனுமதி உள்ளது என்றார்.

அமெரிக்க சுதந்திர பாதுகாப்பு முயற்சி என்ற அமைப்பினாலேயே இந்த விளம்பரம் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே சிக்காகோ மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகர பஸ் வண்டிகளில் இந்த விளம்பரம் காண்பிக்கப்படுகிறது.

குறித்த விளம்பரத்தில் முகத்தை மறைத்த ஒருவரின் புகைப்படத்திற்கு அருகில், பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு குறிப்பிடுவதுபோல், "ய+தர்களை கொலைசெய்வது அல் லாஹ்விடம் நம்மை நெருக்கமாக்குகிறது" என்று எழுதப் பட்டுள்ளது. பின்னர், "இதுதான் அவர்களது ஜpஹாத். உங்க ளுடையது என்ன?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு தம்மை அதிருப்தி அடையச் செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் நிய+யோர்க் மாநகர போக்குவரத்து ஆணையம், மாற்று தீர்வுகள் குறித்து மீளாய்வு செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளது. விளம்பரத்தை வெளியிடும் அமெரிக்க சுதந்திர பாதுகாப்பு முயற்சி என்ற அமைப்பு சர்ச்சைக்குரிய வளைப்பதிவாளர் மற்றும் செயற்பாட்டாளரான பமீலா கல்லரினால் நடத்தப்படுகிறது. இந்த அமைப்பை இஸ்லாமிய எதிர்ப்புக் குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

2 comments:

  1. இதனாலும் இஸ்லாம் வாலரும்தானே தவிர குன்றிப்போகாது இது அல்லாஹ் உடைய மார்க்கம் அதை எவ்வாறு வரக்க வேண்டும் என்று அவேனுக்கு தெரியும்

    ReplyDelete
  2. செப்டம்பர் 11 தாக்குதல் நடந்து பழைய கதையாகிவிட்டதே. எனவே தான் இவ்வாறு முட்டாள் தனமாக நடந்து இன்னொரு தாக்குதலை கேட்டுத் திண்ணப்போகிறார்களோ.

    ReplyDelete

Powered by Blogger.