Header Ads



எனது கழுத்தை வெட்டிவிட்டனர் - மகிந்த

நாட்டில் தற்போது காணப்படும் நிலையில் தான் விகாரைக்கு வழிபட சென்றாலும் பிக்குமாருக்கு இலஞ்சம் கொடுத்ததாக கூறுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தளை புருக்கல ஸ்ரீ தம்மசித்தியாராம சிறி சங்கபோதி பிரிவெனாவிற்கு இன்று விஜயம் செய்த போதே அவர் இதனை கூறியுள்ளார். 

இங்கு பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டமை மற்றும் கோத்தபாய ராஜபக்ச இலஞ்ச ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போதைய அரசாங்கம் தான் உட்பட தனது குடும்பத்தினரையும், உறவினர்களையும் தண்டிக்க முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.

2

அத்துடன் தமது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் தமது உணவு சுவை பார்ப்பவர்கள் கூட தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இவர்களே தமது நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்தரப்பினருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர். இதன்காரணமாகவே கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமது தோல்வி ஏற்பட்டது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவர்கள் யாவரும் தமது கழுத்தை வெட்டிவிட்டதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவின் இக்குற்றச்சாட்டுத் தொடர்பில் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டவரும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாதுகாப்பு அதிகாரியாகவும் செயற்படும் காவல்த்துறை அத்தியட்சகர் விக்கிரமசிங்க எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்று வெளிநாட்டு செய்தி சேவை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Aiyayyo , Makkal appadiyum solvaargala Sir ? Azuwum ungalaipponravargalai
    paarththu ? UNPyil irunthu maaththiram eththanai per siramadana adippadayil
    ungal pakkam romba aavalaga vanddargal sir , Ellamey annadaanam thane sir ?
    Enna ulagamadaa ithu ? Athu pogattum , neenga innum palaya padiye appidiye
    irukkinga sir , Azwarin , Kadarin , chella paappa ! Ummmma !

    ReplyDelete

Powered by Blogger.