மயூரன் சுகுமாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது, பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போனது
போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
12 பொலிஸார் சூழ்ந்திருக்க இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. உயரதிகாரிகள், அவுஸ். அதிகாரிகள், பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், உறவினர்கள், கருணை உள்ளம் கொண்ட மக்கள் என சர்வதேச அளவில் அனைவரும் இந்தோனேசிய அரசிடம் தண்டனையை ரத்து செய்யுமாறு கேட்டபோதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்தோனேசிய அரசாங்கம்.
எனினும் இவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்னும் பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
போதைமருந்தை கடத்துவதற்கான கருவியாக மேரி ஜேன் வெலொசோவை தான் பணியில் அமர்த்தியதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்நிலையத்தில் தன்னைத்தானே ஒப்படைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனினும் பிலிப்பைன்ஸ் அரசு, இந்தோனேஷிய Attorney-General-க்கு மரண தண்டனையை தடை செய்யுமாறு ஒரு அவசர கடிதத்தை அனுப்பியமையை அடுத்தே இப்பெண்ணின் தண்டனை இறுதி நேரத்தில் தள்ளிப் போயிருக்கின்றது.
ஏனைய எண்மரும், அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கை, இந்தோனேசியா, மற்றும் நைஜீரியா, பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
தனது குடிமக்களான மயூரன் , மற்றும் சான் ஆகியோர் மரணதண்டனையில் கொல்லப்பட்டால் அதற்கான எதிர்வினைகளுக்கு இந்தோனேஷியா முகம் கொடுக்கவேண்டி வரும் என்று அவுஸ்திரேலியா எச்சரித்திருந்த போதிலும் குற்றவாளிகளை தண்டித்து தடுப்பதற்காகவே இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாக இந்தோனேஷியா தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மரண தண்டனை என்பது அநாகரீகமானது, இன்னொரு மனித உயிரைப் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
ReplyDeleteWe have to thing day by day how many people's are dieing by Drugs??? How many family are in the Steer??? EXTR,,,,,
DeleteHe's gone, good riddance .
ReplyDeleteBravo Indonasia !
What a made world screaming about his death.
Who is going to look after the families ruined by this gang ?
Australia wants to keep the tradition of keeping criminals on its soil rejecting genuine refugees off its soil .
World is bt safer minus one gang of drug dealers.
நீண்ட காலம் சிறையில் அடைத்து வைத்திருந்து மரணதண்டனை வழங்குவது நல்ல மனிதர்களுக்கான அடையாளமன்று
ReplyDeleteBut Mr jamaludeen why they kept such a long years in jail and kill him it is not a human being try to understand the common sense and kindness
ReplyDeleteI appreciate you kindness. But did you thing about a Country Law?? Did you thing about how many Families are in the Streets?? How many People's are Dieing day by day by Drugs???
DeleteIndonesia has done a terrible act. True Myuran did the wrong thing but he is truely reformed and he has been doing much more good work in the jail helping other drug affected prisoners in rehabilitation. He has been teaching prison inmates English, computer, arts etc and giving them good counselling. It is sad people like Jamaludin Afghani try to talk here with absolutely no understanding of true situation. Though Myuran was a criminal at one stage of his life, he will live in the hearts and minds of millions of people. By the way Jaffna Muslim, what is "eelathamilan"?
ReplyDeletethos smugler distroy many people life they must puninished more than 100 time
ReplyDeleteISLAMIYA WIROZA COMMENTSKALUKKU IDAM KODUKKUM "JAFFNAMUSLIMUM" MOKKO STARUM ENNA TODAFIL ULLARHALO??????????? IPPADI PONAL "JAFFNAMUSLIMIN" ISLAMIC WAY ?????????????????
ReplyDeleteWhat about the the life of 1000 s of Indonesian youths, who lost their future by get addicted to drugs by these drug smugglers? This is not uncivilized act ?
ReplyDeleteYou are worrying for WRONG DOORS
But
Indonesian and Good people worrying for THOSE 1000s who lost their future and their affected families
லிட்டில் ஸ்டார், நீ முஸ்லிமாக இருந்தாலும் இல்லா விட்டாலும் இஸ்லாத்துடன் விளையாடாதீர்.
ReplyDeleteலங்காகூல் அவர்களே ! லிட்டில் ஸ்டார் இஸ்லாத்துடன் விளையாட வில்லை, பணத்திற்காக எதையும் சைய்யத் துணிந்தவர்களை நாகரிகம் தெரிந்தவர்கள் எண்டு சொலுவார் போலும். தனது அண்ணன்,தம்பியை (போதை பொருளுக்கு அடிமை படுத்தி) கொலை செய்தவன் நாகரிகம் தெரிந்தவன். ஆனால் இதை செய்தவக்கு தண்டனை வாங்கி கொடுத்தல்அது அநாகரீகம்.
ReplyDeleteநண்பா லிட்டில் ஸ்டார் ,மயூரன் என்ற மனிதரால் சீரழிக்கப்பட்ட குடும்ப்பத்தை பற்றி யோசித்தாயா ?அவர் செய்த குற்றத்திற்கு தண்டனை சரியானதே அனால் திருந்தி வாழ சந்தர்பம் அளித்திருக்கலாம். தண்டனையை விட மன்னிப்பதே மேலானது.மயூரனின் ஆத்துமா சாந்தியட எல்லாரும் பிரார்திப்போம்.
லங்கா கூல் அவர்களே. லிட்டல்ஸ்டார்ட் இஸ்லாத்தை பற்றி எதுவும் சொல்லாத போது ஏன் அவரை பற்றி விமர்சிக்க வேண்டும்.அனால் ஒன்று மட்டும் உண்மை. இது போன்ற தண்டனைகள் பெரும் பாலும் எல்லா நாடுகளிலும் அமைதியாக நிறைவேற்ற படுகிறது,அனால் இஸ்லாமிய நாடுகளில் நிறைவேற்றினால் மட்டும்தான் மனிதாபிமானதை பற்றி உலகமே பேசும்.
ReplyDeleteஎனது கருத்தை விமர்சித்த வாசகர்களுக்கு,
ReplyDeleteமயூரனை சுத்தவாளி என்றோ, போதைப்பொருள் கடத்தல் சரியானது என்றோ, மயூரன் ஈழத் தமிழன் - தமிழனுக்கு அநீதி என்றோ நான் கோசம் போடவில்லை.
நாகரிக உலகில் மரண தண்டனை என்பது அநாகரீகமானது என்பதே எனது கருத்தாகும். மரண தண்டனையை நிறைவேற்றுபவன் ஒரு கொலை காரன் ஆகின்றான் என்பதையும் கவனிக்க வேண்டும்.
Little Star u may be right in a way! But by letting these people outside or giving them lessor punishment will encourage others to do the same like Mayuran did!
ReplyDeleteWould you be happy to see ur kid get addicted to drug ? People arguing about rehabilitation of Mayuran! He was a trafficker not a user. Users will pay the heavy price and it will harm the society! That's why it's good to have death penalty!
மயூரன் சுற்றவாளி அல்ல குற்றவாளிதான் என்று ஒப்புக் கொள்கிறார்கள்,அனால்அவர் யாரையும் கொலை சய்யவில்லை என்கிறார்கள். கீழே விழுந்தவன் மீசையில் மண் படவில்லை என்பது போல.
ReplyDeleteகுற்றவாளிகளை தண்டிக்காமல் விட்டால் இவயகதில் மனிதன் வாழமுடியாது
(நாகரீமான செயலை அனாகரீகம் எண்டு சொல்லுவதும் அனாகரீகமே)
மேலே கடைசியாக கருத்து சொன்ன இருவருக்கும், போதைப்பொருள் கடத்துவது, விற்பது குற்றம் என்றால், போதைப்பொருள் பாவிப்பதும் குற்றமே.
ReplyDeleteபோதைப்பொருள் பாவிப்பவர்களை புணர்வாழ்விற்கு அனுப்பிவிட்டு, விற்றவனுக்கும், கடத்தியவனுக்கும் மட்டும் குற்றம் சொல்வது எப்படி சரி? போதைப்பொருள் பாவிபப்வர்களை யாரும் நிர்ப்பந்திப்பதில்லை, அவர்களாக விரும்பித்தான் பாவிக்கின்றார்கள், ஆகவே அவர்களுக்கும் குற்றத்தில் சம பங்கு உண்டு.