சந்திரிக்காவின் அதிரடித் தீர்மானம் - விமல் வீரவன்ச என்ன செய்ய போகிறார்..?
முன்னாள் வீடமைப்பு அமைச்சரும் ஜே.என்.பி கட்சியின் தலைவருமான விமல் வீரவன்சவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கதவு மூடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் கீழ் அமைச்சுப் பதவிகளை விமல் வீரவன்ச வகித்துள்ளார்.மஹி;ந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.எனினும் கூட்டமைப்பில் உத்தியோகபூர்வமாக விமல் வீரவன்சவின் ஜே.என்.பி. அங்கம் வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, விமல் வீரவன்சவின் ஜே.என்.பி கட்சியை சுதந்திரக் கூட்டமைப்பின் செயற்பாடுகளின் இணைத்துக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Three top leaders of the country in one voice for the country in the open. This is
ReplyDeletetruly a historic moment not to be missed by the intelligent people. At a time the
country's interest is before everything else, real anti-national elements are being
tattooed. Good job.