இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை - இந்தோனேசியா செல்வதை தவிர்த்தார் மைத்திரி
இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலும், பன்டுங் நகரிலும் நாளை முதல் எதிர்வரும் 24ம் திகதி வரை 60வது ஆசிய-ஆபிரிக்க உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்பதுடன், அங்கு உரையாற்றுவார் என இந்தானேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள தகவலுக்கமையவே ஜனாதிபதி பங்குபற்ற மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாநாட்டில் ஆசிய-ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 27 நாடுகளின் தலைவர்கள், 9 நாடுகளின் துணை அதிபர்கள், 3 நாடுகளின் பிரதிப் பிரதமர்கள் பங்கேற்கவுள்ளனர். ஏனைய நாடுகளின் சார்பில் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கையும் அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் பட்டியலிலேயே இடம்பெற்றுள்ளது. எனினும், எந்த அமைச்சர் பங்கெடுக்கவுள்ளார் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு குறிப்பிடவில்லை.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையே ஜனாதிபதி குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
போகும் பொழுது நல்லபடியாக போவார், ஆனால் வரும் பொழுது சாதாரண குடிமகனாக வர வேண்டி ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. ஆகவே, போகாமல், கதிரையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருப்பதுதான் நல்லது.
ReplyDelete