Header Ads



இலங்கையில் முதன்முறையாக, மின்சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கு மின் ஏற்றும் நிலையம் திறக்கப்பட்டது

மின் சக்தியில் இயங்கும் வாகனங்களின் மின்கலங்களுக்கு மின் ஏற்றும் நிலையம் ஒன்று கொழும்பில் முதன்முறையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதுள்ள 100 வீதமான வாகனங்கள் எரிபொருள் மூலம் இயங்குபவை.

2020ம் ஆண்டில் மின்சாரம் மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மின்வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மின்னை ஏற்றும் நிலையம் முதன்முறையாக கொழும்பு டிக்கல் வீதியில் திறக்கப்பட்டுள்ளதுடன், அதனை மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று திறந்து வைத்துள்ளார்.


1 comment:

  1. மின்சாரத்தில் இயங்கும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என்பன 2008 - 2009 ஆண்டு காலப்பகுதியில் பிரபல்யமாக விளம்பரம் செய்யப்பட்டு சீனாவில் இருந்து தருவிக்கபப்ட்டு இலங்கையில் விற்பனை செய்யப்பட்டன, அவை அனைத்துமே பயன்படுத்த முடியாத நிலையில், குறுகிய காலத்தில் தோல்வியைத் தழுவின.

    ReplyDelete

Powered by Blogger.