ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது - நளின் பண்டார எம்.பி.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவரைக் கொலை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று நளின் பண்டார எம்.பி. சபையில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற 19ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் இடம்பெற்ற ஜனாதிபதியின் கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினருடன் சென்ற ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்துள்ளார்.
ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதை இது காட்டுகின்றது. அவரைக் கொலை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதியின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
.jpg)
அதைவிட இலகுவான வழி மஹிந்தவின் குடும்பத்தை கூண்டில் அடைத்து விடுவது. கொலை முயற்சி மஹிந்த, கோத்தா, பசில், நாமல் போன்றவர்களின் திட்டமிட்ட சதி மூலமே நடக்கலாம்.
ReplyDeletePlease strength the security of president and former politicians are taking efforts to ruling again so take care of the president
ReplyDeleteநளின் பண்டார தேவையில்லாமல் பாய்ந்து கொடுத்து, ஜனாதிபதியிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என்று பார்க்கின்றாரா? மைத்திரியின் பாதுகாப்பை அதிகரிப்பது என்பது, மைத்திரியை மக்களை விட்டும் தூரமாக்கவே உதவும்.
ReplyDeleteஅதிகாரத்தை பாதியில் இழந்தவர்கள் எதையும் முயன்று பார்ப்பதற்கு முன்வருவார்கள் என்பதனால் இவ்விடயத்தை உதாசீனம் புரியமுடியாது.
ReplyDelete