பகுத்தறிவு வாதம் ஒரு சாபக்கேடாகும்..!
-நாகூர் ழரீஃப்-
அல்லாஹ்வின் அருட்களில் மிகவும் பிரதானமானதாகக் கருதப்படுவது பகுத்தறிவு ஆகும். அதன் மூலமே மனிதன் ஏனைய படைப்புக்களை விட சிறப்பானவன்ளூ சிரேஷ்டமானவன் என்ற அந்தஸ்தை அடைகின்றான்.
எனினும் மனிதனது பகுத்தறிவு, அல்லாஹ்வின் மார்க்கத்தின் விரிவாக்கத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகும்ளூ அதற்கு சில வரையறைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வரையறைகளைத்தாண்டிச் சென்றதனாலேயே 'முஃதஸிலா' என்ற பகுத்தறிவு வாதக் குழு தோற்றம் பெற்று, இஸ்லாமிய சமூகத்துக்கு மிகப் பெரிய சாபமாகவும் சவாலாகவும் அமைந்தது என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும்.
அல் குர்ஆனையும் அஸ் ஸுன்னாவையும் அவர்களது பகுத்தறிவின் அடிப்படையில் சிந்திக்கத் தலைப்பட்டதால், அல்லாஹ்வின் திருநாமங்களை ஏற்றுக் கொண்டவர்கள், அவனது பண்பியல்களை மறுக்கத் தலைப்பட்டனர். அவர்களது சிந்தனைக்கும் கோட்பாட்டுக்கும் நேர்படுபவைகளை ஏற்றுக் கொள்வதுடன், அதற்கு முரணாகப் படுபவைகளை நிராகரித்தனர்.
அல்லாஹ் இருக்கின்றான் என்று ஏற்றுக் கொண்டவர்கள், அவனது திருநாமங்களின் எந்த அர்த்தத்தையும் காணவில்லைளூ அதற்கு எந்தப் பெறுமானமும் கொடுக்கவில்லை. அல்லாஹ் 'றஹ்மான்' என்று ஏற்றுக் கொள்ளும் அவர்கள் அவனது 'றஹ்மத்' என்ற அருளை மறுத்தனர். இது அவர்களது பகுத்தறிவு வாதத்தின் விளைவாகும்.
அதே வேளை, அஹ்லுஸ் ஸுன்னா பிரிவைச் சார்ந்த அனைவரும் அல்லாஹ்வின் திருநாமத்துடன், அவனது பண்புகளையும் ஏற்றுக் கொள்கின்றனர். ஒருவரைச் சீமான் என்று நாங்கள் அழைப்பதாயின் அவர் செல்வந்தர் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்பது அதன் அர்த்தமாகும். ஒரு ஏழையைப் பார்த்து சீமான் என்று சொல்வதில்லை என்பதைப் போன்றதாகும்.
மற்றும் சிலர், அல்லாஹ்வின் சில பண்புகளை ஏற்றுக் கொள்வதுடன் மற்றும் சில பண்புகளை 'தஃவீல்' எனும் வியந்துறைத்தல் ஊடாக மாத்திரமே ஏற்றுக் கொண்டனர். நேரடியாக ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
பகுத்தறிவு வாதத்தை கொள்கையாகக் கொண்டவர்கள், ஹதீஸ் துறை அறிஞர்களையும், அறிவிப்பாளர்களையும் குறைகூறத் தலைப்பட்டமையும், இதன் விளைவாக சமூகம் பாரிய வழிபிறழ்வின் பக்கம்; சரிந்தமையும் வரலாறு கூறும் கசப்பான ஓர் உண்மையாகும்.
'இப்பிரிவினர், 'அஹ்லுல் பித்ஆ' என்றே அழைக்கப்பட்டனர். இவர்களது வழிகேட்டுப் பிரச்சாரங்களில் முக்கியமான ஒன்றாகக் காணப்படுவதுளூ ஹதீஸ் துறை அறிஞர்களையம், அறிவிப்பாளர்களையும், அதன் காவலர்களையும் குறைகூறி, அவர்களைத் தரக்குறைவாக விமர்சித்தல், அவர்களது அறிவில் ஐயம் கொள்ளல், அவர்களை அறியாமையில் இருப்பதாகவும் சிந்தனைக்கும் அறிவியலுக்கும் அப்பாட்பட்டவர்கள் என்றும் வர்ணித்து, அவர்களது சமூக அங்கீகாரத்தை சிதைத்தல்; போன்ற சாபச் செயற்களில் ஈடுபடுவதாகும' என்று அபூ உஸ்மான் இஸ்மாஈல் அல் ஸாபூனி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
'பகுத்தறிவு வாதம் பேசி, அல் குர்ஆனையும் அஸ் ஸுன்னாவையும் புறந்தள்ளும் பிரிவினரை இழுத்து வந்து சாட்டையடி கொடுத்து, ஒட்டகை மேல் ஏற்றி, ஊர்வலமாகக்; கொண்டுபோய், இது தான் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் வார்த்தைகளை விடவும் தனது வார்த்தையை சிறப்பிப்பவனுக்கு வழங்கப்படும் தண்டணையாகும் என்று கூறுவதே எனது தீர்ப்பாகும்' என்று இமாம் ஷாஃபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
'அஹ்லுல் ஹதீஸ்' எனப்படும் ஹதீஸ் துறைக்காகவே தம்மை அர்ப்னித்த மாமேதைகளை குறைகூறாத, ஏசிப்பேசாத எந்த 'பித்ஆ'க் காரர்களையும் உலகில் காணமுடியாது. அவ்வாறு அவர்களை தூற்றுகின்ற போது, அவர்களது உள்ளத்திலிருந்து ஹதீஸ்களின் மீதுள்ள சுவை கழட்டப்படுகின்றது. அதனால் ஹதீஸ்களின் இன்பத்தை அவர்களால் உணரமுடிவதில்லை' என்று இமாம் அஹ்மத் பின் அல் கத்தான் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
'ஒரு காலம் வரும் அப்போது, அல் குர்ஆனின் 'முதஷாஃபிஹாத்' ஆன வசனங்களைப் பிடித்துக் கொண்டு உங்களுடன் தர்க்கம் புரிவார்கள்ளூ அவர்களுடன் ஹதீஸ்களையும் ஒப்பாய்வு செய்தே பேசுங்கள், ஏனெனில் ஹதீஸ் துறையுடன் நெருக்கமான உறவுள்ளவர்களே அல் குர்ஆனை மிகவும் அறிந்தவர்கள் ஆவா' என்று உமர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
'பகுத்தறிவு வாத 'பித்அத்' வாதிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளாதீர்கள்ளூ அவர்களிடம் எந்த மஷூராவும் செய்யாதீர்கள்ளூ அவர்களுடன் தொடர்வுள்ளவர்களது உள்ளமும் குருடாகிவிடும் என்று எச்சரிக்கின்றேன்' என்றார்கள் புழைல் பின் இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்.
'பகுத்தறிவு வாதிகளுடன் விவாதம், தர்கம் போன்றவற்றில் கூட ஈடுபடாதீர்கள்ளூ அவர்களது குழப்பத்தில் உங்களையும் தள்ளிவிடுவார்கள' என்று இமாம் அல் அவ்ஸாஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.
'முஸ்லிம்களது எந்த விவகாரத்திற்கும்; இவர்களிடமோ, இக்கொள்கை சார்புடையார்களிடமோ எத்தகைய உதவியும் கோரப்படலாகாதுளூ ஏனெனில் அவர்களது சமூகச் சங்கமமானது பாரிய தீங்கை ஏற்படுத்தி விடும்' என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
'மேற்படி பிரிவினரின் பிழையான வாதத்தினை எதிர்த்துப் போராடாத ஸஹாபிகளோ, தாபிஃகளோ, அறிஞர்களோ இல்லை எனலாம்' என்ற கருத்தினை இமாம் அல் பகவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இந்தப் பிரிவினரின் தோற்றம் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டின் முற்பகுதியில், ஜஃத் பின் திர்ஹம் என்பவராலும், ஜஹ்ம் பின் அல்ஸப்வான் என்பவராலும் கூபா, குராஷான் என்ற பிரதேசங்களிலேயே உருவானதுளூ எனினும் காலப் போக்கில் சர்வதேசமட்டத்தில் அது ஊடுருவி வளர்ந்து வருகின்றது. இதன் விளைவே, அல் குர்ஆனை மாத்திரம் ஏற்றுக் கொள்ளல், ஹதீஸ்களை ஏற்க மறுத்தல், புத்திக்கும் பகுத்தறிவிற்கும் ஒத்து வராத ஹதீஸ்களை நிராகரித்தல், அதன் அறிவிப்பாளர்களையும் நம்பகத் தன்மையையும் ஏற்க மறுத்தல் போன்றவையாயும்.
அல்லாஹ் இத்தகைய 'ஜஹமிய்ய' சிந்தனையில் இருந்து எம்மைப் பாதுகாத்து அருள்வானாக!
.jpg)
please tell us who are they? PJ?
ReplyDeleteதயவு செய்து எனது கோமண்டை பிரசுரித்து மக்கள் உண்மையை உணர செய்யவும்.
ReplyDelete(ஜப்னா முஸ்லிம் நிர்வாகம், தயவு செய்து இதனை வெளியிடவும்)
இந்த பிற்போக்குத் தனமான, உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அடங்கிய கட்டுரையை வன்மையாக கண்டிக்கின்றேன். இந்தக் கட்டுரையின் போக்கு, இதில் இடம் பெற்றுள்ள விடயங்கள், வசனங்கள் என்பவை மனித நாகரீகத்திற்கும், அறிவிற்கும், சிந்தனைக்கும், உண்மைத்தன்மைக்கும் பொருத்தமற்றவை.
இங்கே கூறப்பட்டுள்ள மிகப்பெரிய பொய், கலீபா உமர் (ரலி) அவர்களின் பெயரால் சொல்லப்பட்டுள்ளது. "ஹதீஸ் துறையுடன் நெருக்கமான உறவுள்ளவர்களே அல்குர்ஆனையும் அறிந்தவர்கள் ஆவர்" என்று உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டதாக, எவ்வித ஆதாரமும் குறிப்பிடப் படாமல் ஒரு அபாண்டம் சொல்லப் பட்டுள்ளது.
இது மாபெரும் பொய்யாகும். உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23 இல் படுகொலை செய்யப்பட்டார்கள், அப்பொழுது "ஹதீஸ் துறை" மட்டுமல்ல, ஹதீஸ்களே தொகுக்கப் பட்டு இருக்கவில்லை.
முதலாவது ஹதீஸ் தொகுப்பான முஅத்தா மாலிக் ஐ தொகுத்த இமாம் மாலிக் பின் அனஸ் அல் ஹாரித் அவர்கள் பிறந்ததே ஹிஜ்ரி 93 இல், அதாவது உமர் ரலி அவர்கள் மரணித்து சுமார் 70 வருடங்களின் பின்னர். இமாம் அவர்கள் அல் முவத்தா ( الموطأ - பொதுவாக இமாமின் பெயருடன் இணைத்து முவத்தா மாலிக் என்று அறியப் படுகின்றது) நூலை தொகுக்க ஆரம்பித்ததே ஹிஜ்ரி 147 இற்குப் பின்னர், அந்த நேரத்தில் கூட உஸூல் ஹதீஸ் எனப்படும் ஹதீஸ் கலை என்பது இருக்கவில்லை. இமாமவர்கள் தமக்குக் கிடைத்த ஹதீஸ்களை தொகுத்தார்கள். பிற்காலத்தில் வந்த இமாம் புகாரி அவர்களின் தொகுப்பின் பொழுதே உஸூல் ஹதீஸ் வழிமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டன, அதன் காரணமாகவே முஅத்தா மாலிக் ஐ விட புகாரி சிறந்து விளங்குகின்றது.
உஸூல் ஹதீஸ் எனப்படும் ஹதீஸ் கலை பற்றிய முதல் அறிமுகமே, முஅத்தா மாலிக் இற்குப் பல வருடங்களுக்குப் பின்னரே முதன் முதலாக ஷுபாஹ் இப்னு அல் ஹஜ்ஜாஜ் அவர்களால் முன்வைக்கப் படுகின்றது.
ஆக, உமர் (ரலி) அவர்கள் மரணித்து பல தசாப்தங்களின் பின்னர் உருவாகிய ஒரு விடையத்தை உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் என்று சொல்வதே எவ்வளவு பெரிய அபத்தம். தங்களது பிற்போக்குத் தனமான கருத்த திணிக்க, எத்தகைய பொய்யையும் சொல்ல தயங்க மாட்டார்கள் இவர்கள் என்பதற்கு இதவிட வேறு என்ன ஆதாரம் தேவை?
மனிதன் சிந்திக்கக் கூடாது, இவர்கள் போடும் எல்லையை மீறி சிந்தித்து, கேள்விகள் கேட்கக் கூடாது, அப்படி கேள்விகள் கேட்டால் இவர்கள் ஏற்படுத்தி வைத்திடுக்கும் போலித்தனமான கட்டுப்பாடுகள் தகர்ந்து போகும் என்கின்ற அச்சம் காரணமாக, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பது போன்ற பாவனையில் தாங்களும் கண்ணை மூடிக்கொண்டு, மற்றவர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எவ்வளவு பெரிய அறிவு மறுப்பு ஆகும்?
அத்துடன், "இழுத்துவந்து சாட்டையடி கொடுத்து ஒட்டகத்தின் மேல் ஏற்றி, ஊர்வலமாக கொண்டுபோய்" இவ்வாறான வார்த்தைகளை இன்றைய நாகரீக உலகில் பயன்படுத்த வெட்கப்பட வேண்டாமா? இவ்வாறான மனநிலை, இவ்வாறான வசனங்கள் இஸ்லாத்தை காட்டுமிராண்டி மார்க்கம் என்று உலகில் அறிமுகம் செய்யவே உதவுகின்றன.
ஒரு சில அரபு வார்த்தைகளை கூறி மக்களை பயங்காட்டி சிந்திக்க விடாமல் தடுபப்தன் மூலம், தாங்கள் இஸ்லாம் என்கின்ற போர்வையில் திணிக்க விரும்பும் தங்கள் சொந்த உற்பத்திகளை பாதுகாக்க படாத பாடு படுகின்றார்கள்.
மனிதனுக்கு விசேடமாக சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்த அல்லாஹ், மனித சிந்தனையால் சீரழிக்கப்படும் அளவு பலவீனமான ஒரு மார்க்கத்தை இறக்கி வைக்கவில்லை, அல்லாஹ்வின் உண்மையான மார்க்கம் பலமானது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சாட்டையடி கொடுத்து ஓட்டகத்தில் ஏற்றி ஊரெல்லாம் ஊர்வலம் கொண்டு செல்வேன் என்று பயங்காட்டி சிந்தனைக்கும், அறிவுக்கும் கடிவாளம் போடும் மடத்தனத்தை அல்லலஹ்வின் மார்க்கமான இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்காது.
This comment has been removed by the author.
ReplyDelete