Header Ads



யேமனில் சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாம்..! தாக்குதலை நிறுத்தியது சவூதி அரேபியா

-sfm-

ஏமனில் மேற்கொள்ளப்பட்டு வந்த தமது இராணவ நடவடிக்கை இடைநிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அவுதி அரேபிய அரச வானொலி இந்த அறிவிப்பை விடுத்தது.

ஏமனில் இடம்பெற்ற உள்நாட்டு மோதலை அடுத்து, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதியில் இருந்து, சவுதி அரேபிய இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், கடந்த மூன்று வாரமாக மேற்கொள்ளப்பட்ட தமது தாக்குதலை நிறுத்துவதாக சவுதி அறிவித்துள்ளது.

ஏமனில் தற்போது சுமூக நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்தே இராணுவ தாக்குதல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. ஹீ ஹீ ஹீ, சவூதிக்காரர்கள் லேசுப்பட்ட ஆட்களா என்ன? கீழே விழுந்தும் தாடியில் மண் படவில்லையாம்.

    சவூதி ஷியாக்களை அளிக்கப் போகின்றது, அடுத்தது இஸ்ரவேல்தான் என்று "அல்லாஹு அக்பர்" போட்டுக்கொண்டு இருந்த ஆட்கள் எங்கே?

    ReplyDelete
  2. லிட்டில் இஸ்டார் ,,,,, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சவுதி யமனில் உள்ள சியாக்களுக்கு தட்டி கேட்கும் அளவுக்காவது பொய் சண்டை செய்தது ஓரளவாது மத்திய கிழக்கில் உள்ள சியாக்கள் அடங்கி இருக்கிறார்கள் எஸ்ரேவேல் உட்பட நீங்கள் தவ்ஹீதுக்கு எதிர்ப்பு என்பதற்காக சவுதி அரசு எடுக்கும் எல்லா முடிவும் தப்பு என்று நீங்கள் குறை கூற வேண்டாம் நாம் எழுதும் ஒவ்வொரு பின்னூட்டங்களுக்கும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் வானா என்ற பொண்டாட்டிக்கு கால் பட்டாலும் கை பட்டாலும் கோபம் என்ற மாதிரிதான் உங்கள் கருத்துகள் வருகிறது

    ReplyDelete

Powered by Blogger.