யேமன் மீது சவூதி அரேபியா ஒருபக்கம் குண்டுவீச, மறுப்பக்கம் பெரிய விமான நிலையத்தை கைபற்றிய அல்ஹைதா
ஏமனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மிகப்பெரிய விமான நிலையத்தை அல்கொய்தா கைப்பற்றியுள்ளது.
ஏமனில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் பல நகரங்கள் தீக்கிரையாகி வருகின்றன.
வான்வழி தாக்குதல் பலனளிக்காத நிலையில் தற்போது தரைப்படையை களத்தில் இறக்க சவுதி அரேபியா ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் ஏமனின் அல் முக்காலா நகரில் உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர்.
இதற்கு முன்னதாக சிறையை தகர்த்து முக்கிய தீவிரவாத தலைவர் உட்பட 300க்கும் மேற்பட்ட நபர்களை தப்பிக்க செய்தனர்.
அதுமட்டுமின்றி எண்ணெய் நிலையம் மற்றும் துறைமுகம் ஒன்றையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆக, இன்னொரு ஈராக் தயார் செய்யபப்டுகின்றது. கொல்வதும் முஸ்லிம், கொல்லப்படுவதும் முஸ்லிம்.
ReplyDelete