Header Ads



'மக்கள் வாக்களித்தது மீண்டும் இந்நாட்டை, பௌத்த இனவாதத்திற்கு கொண்டு செல்வதற்கல்ல'

எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பிரதமருக்கு தனித்தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பை தெரிவிப்பதாக இடது சாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் இணைப்பாளர் ஜயம்பதி விக்கிரமரட்ன இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற குழுவின் நிர்வாகத்தின் கீழ் சுயாதீன அமைப்புகளை சக்தி மயப்படுத்த வேண்டும்.

அதுவே 19வது திருத்த சட்டத்தில் இடம்பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய குமுதுகுசும் குமார 19வது அரசியல் அமைப்பிற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பினை வெளியிடுவதானது, தேர்தலில் பெற்ற வெற்றியை அர்த்தமற்ற செயலாக்குவதாகும் என குறிப்பிட்டார்.

தேர்தல் வெற்றியை அர்த்தமற்றதாக்குவதற்கு ஹெல உறுமய முனைகிறது. 6 தசம் இரண்டு மில்லியன் வாக்குகளை வழங்கியது நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம், இனங்களுக்கு இடையேயான ஒற்றுமையினை கட்டி எழுப்புவதற்கே அன்றி மீண்டும் இந்த நாட்டை சிங்கள பௌத்த இனவாதத்திற்கு கொண்டு செல்வதற்காகவல்ல என குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.