பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை, மே முதலாம் திகதி ஆரம்பிக்கும் ஐ.தே.க.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்க உள்ளது.. எதிர்வரும் 20ம் திகதியின் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட உள்ளது.
தொழிலாளர் தினத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பொரளை கம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கு சமாந்திரமாகவே தேர்தல் பிரச்சாரப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்படவில்லை என்றாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
Post a Comment