இந்தியாவின் தேர்தல் ஆணையாளராக, செய்யது நசீம் அகம்மது சைதி நியமனம்
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் ஏப்ரல் -19ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து வரும் ஹரி சங்கர் பிரம்மா , வரும் 18ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இந்த பொறுப்பில் ஜனாதிபதி நியமித்துள்ள செய்யது நசீம் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். 1976 ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர். விமானதுறையில் டைரக்டர் ஜெனரலாகவும், ஏர் போர்ட் ஆணையத்தின் தலைவராகவும், சில மாநிலங்கள் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான செய்யது வரும் 19ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்று கொள்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்துக்காக எதையும் செய்யமுடிந்ததா இவரால்?
ReplyDeleteஎன்ன அற்பத்தனமான எதிர்பார்ப்பு. தேர்தல் ஆணையாளர், நீதிபதி போன்ற பதவிகள் பக்கச் சார்பின்றி, உவத்தல் காய்த்தல் இன்றி மிக நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயல்பட வேண்டிய பதவிகள்.
ReplyDeleteதேர்தல் ஆணையாளர், அவரது அலுவலகத்திற்கு ஜனாதிபதி மனுக் கொடுக்க வந்தால் கூட எழும்பி கை குலுக்க மாட்டார்.
தேர்தல் ஆணையாளர் முஸ்லிம் என்பதால், தேர்தல் முடிவுகளில் மோசடி செய்து, முஸ்லிம்களை வெல்ல வைக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்?
சொனகப் புத்தி என்று சும்மாவா சொல்கின்றார்கள்?