Header Ads



19 ஐ, தோற்கடிக்காதீர்கள் - சோபித தேரர் கோரிக்கை

19 வது அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பை வெளியிட வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு சமூகநீதிக்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவேவ சோபித தேரர் கோரியுள்ளார்.

எதிர்ப்பார்த்திருந்த இந்த அரசியல் அமைப்பு திருத்தத்தை இனிமேல் முன்வைக்க முடியாது என்ற காரணத்தினாலே இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை மறுநாள் 19வது திருத்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எனவே இதன்போது அதனை தோற்கடிக்க வேண்டாம் என்று சோபித தேரர் கோரியுள்ளார்.

19வது திருத்தத்தை கொண்டு வருவதென்பது பிரதமர் உட்பட்ட பல்வேறு துறையினரின் தேர்தல் உறுதிமொழியாக இருந்தது.

இந்தநிலையில் ஏற்கனவே நிறைவேற்று ஜனாதிபதியை முறையை ஒழிக்கும் கோரிக்கையை முன்வைத்திருக்கும் ஜேவிபி, சமசமாஜக்கட்சி மற்றும் இடதுசாரிக்கட்சிகள் என்பனவும் 19ஆம் திருத்தத்துக்கு ஆதரவை வழங்கும் என்று நம்பிக்கையை தேரர் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.