Header Ads



நேபாளத்திற்கு விரைந்தது, இலங்கையின் 156 பேரைக் கொண்ட 2ஆவது குழு

பாரிய நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உதவி வழங்கும் பொருட்டு இரண்டாவது குழு இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளது.

விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் அடங்கிய 156 பேரைக் கொண்ட குழுவே நேற்று திங்கட்கிழமை நேபாளத்தை நோக்கி சென்றுள்ளது.

பாதிப்புக்குள்ளான நேபாள நாட்டுக்கு உதவி வழங்குவதற்காக இராணுவ வைத்திய படையணி, பொறியியல் ரெஜிமெண்ட் ஆகியன நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நேபாளத்திற்கு சென்றடைந்தது. அக்குழுவில் 4 விசேட வைத்திய நிபுணர்களும் 40 இராணுவத்தினரும் உள்ளடங்குகின்றனர்.

முதலாவது குழுவானது மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ்- தலைமையிலும் இரண்டாம் குழுவிற்கு பிரிகேடியரொருவரும் கட்டளைத் தளபதியாக செயற்படடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.