Header Ads



உலகில் மகிழ்ச்சியான நாடுகள் - இலங்கை 132 வது இடத்திற்கு முன்னேறியது, சுவிஸர்லாந்து முதலிடத்தை பிடித்தது

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இலங்கை 5 இடங்களை தாண்டி முன்னேறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் இயங்கும் நிரந்திர அபிவிருத்தி தீர்வு வலையமைப்பின் மூலமாக இந்த தரப்படுத்தல் தயாரிக்கப்படுவதுடன் 158 நாடுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டு 137 வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது 132 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தனிநபர் வருமானம், ஆயுள்காலம், சுகாதாரம், நாடுகளின் ஊழல் மோசடிகள், சமூக சுதந்திரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த தரப்படுத்துதல் மேற்கொள்ளப்படுகிறது.

சொக்லட் உற்பத்தியில் பிரசித்தி பெற்ற சுவிஸர்லாந்து இந்த தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தை ஐஸ்லாந்தும் மூன்றாம் இடத்தை டென்மார்கும், நான்காம் .இடத்தை நோர்வேயும் 5 ஆம் இடத்தை கனடாவும் பிடித்துள்ளன.

இலங்கையின் அயல் நாடான இந்தியா 117 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 15வது .இடத்திலும் பிரித்தானியா 21 வது இடத்திலும் உள்ளன.

மகிழ்ச்சி குறைந்த நாடுகள் வரிசையில் டோகோ, புருண்டி,சிரியா, பேனின், ருவாண்டா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

No comments

Powered by Blogger.