Header Ads



10 வயது பாடசாலை சிறுவன், கழுத்து வெட்டப்பட்டு படுகொலை

வவுனியா,நெளுக்குளம்,சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

தாயார் வீட்டில் இருந்த சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  மாலை இவ்வாறு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, சாம்பல் தோட்டத்தைச் சேர்ந்த 10 வயதுடைய சந்திரசேகரன் சஞ்சய் என்ற சிறுவனாவான்.

 சிறுவன் எவ்வாறு கொலை செய்யப்பட்டான் என்பது தொடர்பில் விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளைஇ இச்சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள நிலையில் பாசாலையில் வகுப்புகளை நிறைவு செய்து வந்த பின்னர் தாயார் உணவை வழங்கி விட்டு அருகில் உள்ள வீட்டிற்கு 6 வயதுடைய குழந்தையுடன் சென்ற வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர்

வீட்டின் பின்புறமிருந்த சடலத்தை உறவினர்கள் தூக்கி வந்து வீட்டிற்குள் வைத்திருந்தனர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.