மே 1 இல் மஹிந்த அரசியல் பிரவேசம் - தேர்தலில் என் குடும்பம் போட்டியிடாது - மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது அரசியல் பிரவேசம் சர்வதேச தொழிலாளர் தினமான மே 01ம் திகதி இடம்பெறுமென அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கும் கட்சிகளும் அமைப்புக்களும் மே 01ம் திகதி மேதினக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துகின்றனர்.
இவற்றில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வாசுதேவ, விமல், கம்மன்பில உட்பட இந்த அரசியல் முன்னணி தனது மேதினக் கூட்டத்தை கிருலப்பனை விளையாட்டுத்திடலில் நடாத்தவுள்ளது.
2
எதிர்வரும் பொது தேர்தலில் எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் போட்டியிட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். பொலன்னறுவையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தனது குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் ஆசனத்தை எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனது பிள்ளைகள், சகோதரர்களை தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என உறுதி செய்துள்ளதுடன், தமது குடும்பத்தினரை அரசியலில் இருந்து வெளியே வைத்து தான் உலக நாடுகளுக்கு ஒரு உதாரணமாக செய்ற்படவுள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும் அரசியல் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி அதிகாரம் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
You will not fulfill what you said within 100 days and you did not arrest who are fraud and bribe. When will happen. Or we are cheating by the government
ReplyDelete