ரணில் விக்ரமசிங்கவிடம், பூரண அதிகாரம்
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பூரண அதிகாரம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நேரடி கண்காணிப்பில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மிகவும் பொருத்தமான ஓர் குழுவினை நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டுமென கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் தலைவரது விருப்பத்திற்கு அமைய இந்தக்குழு களமிறக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். இதன்படி வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பொறுப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment