Header Ads



052-2222222 என்ற இலக்கத்தை, 80 இலட்சத்து 10 ஆயிரம் திர்ஹாமுக்கு வாங்கிய டுபாய் தொழில் அதிபர்

துபாயில் இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைபேசி சேவைகளை வழங்கி வருகின்றன.

அந்நிறுவனங்களில் ஒன்றான ‘டூ‘எனும் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் சிறப்பான எண்களை ஏலம் விட முடிவு செய்தது.

அதன்படி, 70 தனிச்சிறப்பு மிக்க எண்கள் ஏலத்தில் விடப்பட்டன. அந்த எண்கள் கோல்ட், டயமண்ட், பிளாட்டினம் மற்றும் பிளாட்டினம் பிளஸ் ஆகிய 4 வகையாக பிரிக்கப்பட்டன.

ஏலத்தில் ஒரு எண் 80 இலட்சத்து 10 ஆயிரம் திர்ஹாம் தொகைக்கு ஏலம் போனது. அந்த எண்ணை அமீரகத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் முகம்மது ஹிலால் வாங்கினார். அந்த எண் 052-2222222 ஆகும்.

இதைத் தொடர்ந்து மற்றொரு எண் 41 இலட்சத்து 50 ஆயிரம் திர்ஹாமுக்கு ஏலம் போனது. அந்த எண் 0522 000000 ஆகும்.

அமீரக தொலைபேசி எண் ஏலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஏலம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

1 comment:

Powered by Blogger.