உலக முஸ்லிம்கள் கலீபாவுக்கு விசுவாசத்தை, வெளிப்படுத்த பொகோ ஹராம் அழைப்பு
ஆயுதக் குழுவான பொகோ ஹராம் ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுடன் இணைவதாக அறி விக்கும் ஓடியோ செய்தியை வெளியிட்டுள்ளது.
பொகோ ஹராம் டுவிட்டர் பக்கத்தில் போடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பு உறுதி செய்யப்படாதபோதும் அந்த குழுவின் தலைவரான அபு+பக்கர் 'காவு என நம்பப்படுபவர் உரையாற்றியுள்ளார்.
வடக்கு நைஜPரியாவில் இஸ்லாமிய அரசொன்றை அமைக்கவெனக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து பொகோ ஹராம் போராடி வருகிறது. இந்த மோதல் அயல் நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்நிலையில் ஐ.எஸ்ஸ{க்கு விசுவாசத்தை வெளிக்காட்டியிருக்கும் மற்றொரு ஜpஹாத் குழுவாகவே பொகோ ஹராம் பார்க்கப்படுகிறது. முன்னர் பொகோ ஹராம், அல் கொய்தாவுடன் தொடர்புபட்டிருந்ததாக கடந்த காலங்களில் நம்பப்பட்டு வந்தது.
ஐ.எஸ். போராளிகள் கிழக்கு சிரியா மற்றும் வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கின் பெரும்பகுதியை கடந்த ஆண்டு கைப்பற்றி இருந்தது. இஸ்லாமிய சட்டம் அல்லது 'ரியாவின் கீழ் ஒரே அரசியல் மற்றும் மதத் தலைமையாகக் கருதப்படும் கிளாபத்தை நிறுவ இந்த குழு முயற்சித்து வருகிறது. ஐ.எஸ்ஸின் தலைவரான அபூ பக்கர் அல் பக்தாதியை அவரது அதரவாளர்கள் கலீபா இப்ராஹிம் என்று அழைத்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருக்கும் ஓடியோ செய்தியில் "கலீபாவுக்கு எமது விசுவாசத்தை நாம் அறிவிக்கிறோம். கடினமான மற்றும் சுபீட்சமான காலங்களிலும் சொற்களுக்கு கீழ்ப்படிவோம். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் கலீபாவுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்துமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்" என்று பொகோ ஹராம் தலைவர் வலியுறுத்தி யுள்ளார்.
ஏற்கனவே வட ஆபிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தின் பல ஆயுதக் குழுக்களும் ஐ.எஸ்க்கு விசுவாசத்தை வெளியிட்டிருந்தது. இதில் எகிப்து, லிபியா, அல்ஜPரியா, யெமன் மற்றும் சவ+தி அரேபியாவின் ஜpஹாதிக்கள் ஐ.எஸ்,க்கு வெளியிட்ட விசுவாசத்தை அதன் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி கடந்த நவம்பரில் அங்கீகரித்திருந்தார்.
அதேபோன்று ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆயுததாரிகளும் அங்கு ஐ.எஸ். மாகாணத்தை நிறுவுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தது.

Post a Comment